25 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை - ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
25 ஆம் தேதி முதல் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை - ஜூன் 2-ல் பள்ளிகள் திறப்பு - பள்ளிக்கல்வித் துறை அறிவிப்பு
![]() |
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக்ககல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன் வெளியிட்ட அறிவிப்பில்,
அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பள்ளி இறுதி தேர்வு 24.04.2025 அன்று முடிவடைய உள்ளது. 25,04,2025 முதல் மாணவர்களுக்கான கோடை விடுமுறை என தெரிவிக்கப்படுகிறது.
ஆசிரியர்கள் விடைதாள் திருத்தும் பணியிணை முடித்து தேர்வு முடிவினை வெளியிட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்காக ஆசிரியர்களுக்கான பள்ளி இறுதி வேலை நாள் 30-04.2025 எனத் தெரிவிக்கப்படுகிறது.
2025-2026 ஆம் கல்வியாண்டில், 02.06.2025 (திங்கள் கிழமை) அன்று அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் திறக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது,
எனவே, 02.06.2025 அன்று பள்ளிகள் துவங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரை வழங்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்