மாசம் 200 மட்டுமே வீடுகளுக்கு 100Mbps வேகத்தில் பிராட்பேண்ட் இன்டர்நெட்- தமிழக அரசு அறிவிப்பு
அட்மின் மீடியா
0
வீடுகளுக்கு குறைந்த செலவில் இணைய வசதி சட்டப்பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
வீடுகளுக்கு கேபிள் டிவி சேவை போல,100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 செலவில் Internet வசதி -பேரவையில் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு
சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்,
தமிழகத்தில் கேபிள் டிவி சேவை வழங்குவது போல, வீடுகள் தோறும் 100 Mbps வேகத்தில் மாதம் ரூ.200 கட்டணத்தில் இணைய சேவை வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும், இ-சேவை மையங்களில் பெறக்கூடிய சேவைகள் வாட்ஸ்அப் செயலி மூலம் ஒருங்கிணைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இந்தத் திட்டத்தின் முதற்கட்டமாக, 2,000 அரசு அலுவலகங்களுக்கு இணைய வசதி கொடுக்கப்பட்டுள்ளது என்றும், 4,800 கிராம பஞ்சாயத்துகளில் இருந்து இணைய வசதி வேண்டும் என்று விண்ணப்பங்கள் வந்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். இந்த கிராமங்களுக்கு தேவையான வசதிகள் உள்ளதா என்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்
Tags: தொழில்நுட்பம்