சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம், ஸ்பீடு எவ்வளவு தெரியுமா, முழு விவரம் இதோ China launched 10G the first in the world.
சீனாவில் 10G இணைய சேவை அறிமுகம் ஸ்பீடு எவ்வளவு தெரியுமா முழு விவரம் இதோ China launched 10G the first in the world.
உலகின் முதல் 10ஜி இணைய சேவையை சீனா அறிமுகப்படுத்தியுள்ளது. சீனா யூனிகாம் தொலைத்தொடர்பு நிறுவனத்துடன் இணைந்து, ஹெபெய் மாகாணத்தின் சியோங்கான் நியூ என்ற பகுதியில் 10ஜி ஸ்டாண்டர்ட் பிராட்பேண்ட் நெட்வொர்க்கை அறிமுகப்படுத்தி உள்ளது.
10ஜி இணையதள சேவை மூலம் 3 மில்லிநொடிகளில் 9,834 எம்.பி.பி.எஸ் வேகத்தில் டவுன்லோடு செய்யவும், 1,008 எம்.பி.பி.எஸ். வேகத்தில் அப்லோடு செய்யவும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 ஜி சேவை நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவின் ஹூவாய் நிறுவனம் மற்றும் சீன யுனிகான் ஆகிய நிறுவனங்கள் இணைந்து 10ஜி இணையசேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
ஆரம்பத்தில் 2ஜி யில் தொடங்கிய இணைய சேவை, 3ஜி, 4ஜி என்று அதிகரித்து, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது 5ஜி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளில் தற்போது தான் 5ஜி சேவையே அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், சீனாவில் 10ஜி சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது
Tags: தொழில்நுட்பம்