சமூக அறிவியல் தேர்வில் தவறான கேள்வி- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்- தேர்வுத்துறை அறிவிப்பு முழு விவரம்
தவறான கேள்வி- 10ம் வகுப்பு மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண்- தேர்வுத்துறை அறிவிப்பு முழு விவரம்
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 28ம் தேதி தொடங்கி ஏப்ரல் 15-ம் தேதி வரை நடைபெற்றது.
பொதுத்தேர்வு முடிந்ததும் மாணவர்களின் விடைத்தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. நேற்று முதல் விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்கிய நிலையில் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது.
இந்நிலையில் 10ம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்வியில் ஜோதிபா ஃபுலே குறித்த ஒரு கேள்விக்கு மூன்று ஆப்சன்கள் கொடுத்து ஒன்றை தேர்வு செய்யுமாறு கேட்கப்பட்டிருந்தது.
இந்த கேள்வியில் இரண்டு வாக்கியங்களுமே முரணாக உள்ளதாக கூறி இதற்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என ஆசிரியர்களும் மாணவர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.
இந்நிலையில், மாணவர்கள் அந்தக் கேள்விக்கு பதிலளித்திருந்தாலே, அதற்கான ஒரு மதிப்பெண்ணை வழங்க வேண்டும் என அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.இதனால் மாணவர்கள் குஷியில் துள்ளித் குதிக்கின்றனர். வரும் மே 19ம் தேதி 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்