அனுமதி இல்லாமல் ஹஜ் செய்தால் 10,000 ரியால்கள் அபராதம் - சவூதி அரசு அறிவிப்பு
அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சித்தால் 10,000 ரியால்கள் அபராதம் - சவூதி அரசு அறிவிப்பு
செல்லுபடியாகும் ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்ய முயற்சித்தால் 10,000 சவூதி ரியால்கள் (சுமார் AED 9,700) அபராதம் மற்றும் பல்வேறு விதிமுறைகளை சவூதி சுற்றுலா அமைச்சகம் வெளியிட்டுள்ளது
இது குறித்து வெளியான அறிவிப்பில்:-
செல்லுபடியாகும் ஹஜ் அனுமதி இல்லாமல் ஹஜ் செய்யும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் யாத்திரீகர்களுக்கு 10,000 சவூதி ரியால்கள் அபராதம் விதிக்கப்படும்.
அனுமதியின்றி பல யாத்ரீகர்களை அழைத்து சென்று விதிமீறலில் ஈடுபடும் நபருக்கும் 10,000 ரியால் அபராதம் விதிக்கப்படும். மேலும் 15 நாட்கள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படும்
அனுமதியின்றி ஹஜ் செய்ய முயற்சிப்பது அல்லது அனுமதியில்லாத யாத்திரிகர்களை அழைத்து செல்லும் குடியிருப்பாளர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும். அவர்களுக்குத் தண்டனை முடிந்ததும் நாடு கடத்தப்படுவர் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மீண்டும் சவூதி அரேபியாவிற்கு செல்ல தடை விதிக்கப்படும்.
Tags: மார்க்க செய்தி வெளிநாட்டு செய்திகள்