Breaking News

எங்கும் அலைய வேண்டாம் உங்கள் மொபைல் போனில் இனி நீங்களே PASSPORT Apply பண்ணலாம் முழு விவரம் how to apply for passport

அட்மின் மீடியா
0

ஆன்லைனில்  பாஸ்போர்ட்  விண்ணப்பிப்பது எப்படி 


how to apply for passport
how to apply for passport


முதலில் https://portal2.passportindia.gov.in/AppOnlineProject/user/RegistrationBaseAction?request_locale=en  என்ற இணைய தளத்திற்கு செல்லவும் 

அதில் new user registration என்ற பட்டனை கிளிக் செய்து உங்களுக்கான ஒரு அக்கவுண்டை ஓப்பன் செய்து கொள்ளுங்கள்  

அடுத்து அதில் உங்களது லாக்இன் ஐடி ஓப்பன் செய்து apply for fresh passport என்ற விருப்பத்தைத் தேர்வு செய்துகொள்ளுங்கள்

new user registration கிரியேட் செய்வது எப்படி??

new User registration என்பதை கிளிக் செய்து அதில் உங்களுடைய முகவரி எந்த District-ன் Passport Office கீழ் வருகிறது என்பதை தேர்வு செய்து கொள்ளவும்.

அடுத்து Given Name என்ற இடத்தில் உங்களுடைய பெயரை சரியாக டைப் செய்யுங்கள்.பிறகு Surname என்ற இடத்தில் உங்களுடைய தந்தையின் பெயரை டைப் செய்யுங்கள்.பின்பு Date of Birth என்ற இடத்தில் உங்களுடைய பிறந்த தேதியை டைப் செய்யுங்கள்

.E-mail Id என்ற இடத்தில் உங்களுடைய E-mail Id-யை டைப் செய்யுங்கள். அடுத்து  Login Id என்ற இடத்தில் உங்களுக்கான ஐடியை கிரியேட் செய்யுங்கள்.Password என்ற இடத்தில் உங்களுடைய பாஸ் வேர்டை கொடுங்கள். Confirm Password என்ற இடத்திலும் அதே பாஸ் வேர்டை டைப் செய்யுங்கள்.

பின்பு Hint Question என்ற இடத்தில் சில வினாக்கள் கேட்கப்படும், அவற்றில் ஏதேனும் ஒரு Question-னை தேர்வு செய்யுங்கள். அதற்கான பதிலை Hint Answer என்ற இடத்தில் டைப் செய்ய வேண்டும்.

பின்பு Enter Characters Displayed என்ற இடத்தில் கொடுக்கப்பட்டுள்ள Captcha code-ஐ டைப் செய்து Registration என்பதை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது உங்கள் E-mail Id-க்கு மெயில் அனுப்பப்படும். அவற்றை நீங்கள் Confirm செய்து கொண்டால் உங்களுக்கான Account கிரியேட் ஆகிவிடும். அவ்வளவுதான் அடுத்து உங்கள் லாகின் ஜடி பாஸ்வேர்டு கொடுத்து லாகின் செய்யுங்கள் 

லாகின் செய்தவுடன்

நாம் முதல் முதலாக பாஸ்போர்ட் அப்ளை செய்வதினால் Apply for fresh passport என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்து Type of application என்ற இடத்தில் Normal என்பதை கிளிக் செய்ய வேண்டும். 

உங்களுக்கு Talkal முறையில் பாஸ்போர்ட் வேண்டும் என்றால் Talkal Options கிளிக் செய்து கொள்ளலாம். 

Type of passport booklet என்ற ஆப்ஷனில் 36 pages என்பதை கிளிக் செய்யுங்கள்.இப்பொழுது Next என்ற ஆப்ஷனை செய்யுங்கள்.

அடுத்து  உங்களைப் பற்றிய விபரங்களை கவனமாக பூர்த்தி செய்யுங்கள் அதாவது உங்கள் பெயர், தந்தை பெயர், பிறந்த தேதி, பாலினம், பிறந்த ஊர், என அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்யுங்கள்

அடுத்து உங்கள் தந்தை மற்றும் தாயின் பெயரை டைப் செய்ய வேண்டும். 

அடுத்து  உங்கள் உங்கள் ஆதார் கார்டில் கொடுக்கப்பட்டுள்ள முகவரியை டைப் செய்யுங்கள்

அடுத்து உங்கள் பகுதி காவல் நிலையத்தை தேர்வு செய்து கொள்ளுங்கள், 

அடுத்த பக்கத்தில் தங்களுடைய நண்பர்கள் அல்லது தங்கள் குடுப்பத்தில் உள்ளவர்களின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணை டைப் செய்யுங்கள்

அடுத்து உங்கள் மீது ஏதாவது குற்ற வழக்கு உள்ளதா என்ற சில வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். உங்கள் மீது இந்த விதமான கேசும் இல்லையெனில் அனைத்து கேள்விகளுக்கும் no என்பதை கிளிக் செய்துகொள்ளுங்கள்

அடுத்து passport preview details கொடுக்கப்பட்டிருக்கும். அதில் உங்கள் அனைத்து விவரங்களும் சரியாக உள்ளதா என்பதை சரி பார்த்த பின்பு next பட்டனை கிளிக் செய்யுங்கள்.

அடுத்து பாஸ்போர்ட்டுக்கு உண்டான பணத்தை ஆன்லைன் மூலம் செலுத்துங்கள்

அடுத்து பாஸ்போர்ட் அலுவலகம் ஆவணம் சரிபார்ப்புக்கு அப்பாய்ண்ட் மெண்ட் வாங்கி கொள்ளுங்கள் அவ்வளவுதான்
 
அடுத்து உங்கள் அப்பாயிட்மெண்ட் நாளில்  பாஸ்போர்ட் அலுவலகம் சென்று ஆவணம் சரிபார்ப்பு முடிந்தவுடன்

காவல்நிலையம் வழக்கு சரிபார்ப்பு முடிந்தவுடன் உங்கள் பாஸ்போர்ட் உங்கள் இல்லம் தேடி தபால் மூலம் வந்தடையும்

Tags: முக்கிய செய்தி

Give Us Your Feedback