Breaking News

749 ரூபாய் இலவச ரீசார்ஜ் என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம் 749 recharge fake news

அட்மின் மீடியா
0
749 ரூபாய்  இலவச ரீசார்ஜ் என பரவும் வதந்தி யாரும் நம்பவேண்டாம் 749 recharge fake news

பரவிய செய்தி:-

🏆 INDIA WIN 2025 ICC TROPHY 🏆  2025 ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற இந்தியாவைக் கொண்டாட, பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் 3 மாதங்கள் இலவச ரீசார்ஜ் ரூ. அனைத்து இந்தியர்களுக்கும் 749. இந்த சலுகை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே https://icc-25-offers.blogspot.com/.

உண்மை என்ன:-

அந்த செய்தி உண்மையா என அட்மின் மீடியாவிடம் பலரும் கேட்க அந்த செய்தியின் உண்மையை தேடி அட்மின் மீடியா களம் கண்டது


அந்த செய்தி பொய்யானது


யாரும் நம்பவேண்டாம்


அப்படியானால் உண்மை என்ன?


முழு விவரம்:-

இதுபோல்  பி.சி.சி.ஐ மற்றும் ஐ.சி.சி கிரிக்கெட் வாரியம் எந்த வித ரீச்சார்ஜ் திட்டத்தையும் அறிவிக்கவில்லை

பலரும் ஷேர் செய்யும் அந்த செய்தி இணையதளம் போலியான பிஷ்ஷிங் இணையதளம் ஆகும்

இருப்பினும், நீங்கள் இணைப்பைக் கிளிக் செய்தால், உங்கள் பெயர், மொபைல் எண் மற்றும் வங்கிக் கணக்கு விவரங்கள் போன்ற உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்குமாறு கேட்கும் ஒரு போலி வலைத்தளத்திற்கு நீங்கள் அழைத்துச் செல்லப்படுவீர்கள். 

இந்தத் தகவலை ஸ்கேமர்கள் அடையாளத் திருட்டு அல்லது நிதி மோசடி செய்யப் பயன்படுத்தலாம்.

இலவச மொபைல் ரீசார்ஜ் செய்வதாகக் கூறப்படும் செய்தியை நீங்கள் பெற்றால், செய்தியில் உள்ள எந்த இணைப்பையும் கிளிக் செய்ய வேண்டாம். 

தெரியாத அனுப்புநர்களிடமிருந்து வரும் செய்திகளில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்ய வேண்டாம்.

மோசடி குறித்து காவல்துறை மற்றும் சைபர் கிரைம் அதிகாரிகளிடம் புகார் செய்யுங்கள்.

முடிவு:-

எனவே யாரும் பொய்யான செய்தியினை ஷேர் செய்யாதீர்கள்

Tags: FACT CHECK மறுப்பு செய்தி

Give Us Your Feedback