ஏப்ரல் 1 முதல் புதிய நடைமுறை யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் யாருக்கெல்லாம் தெரியுமா முழு விவரம்
ஏப்ரல் முதல் தேதியில் இருந்து யுபிஐயுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்கள் 90 நாள்கள் வரையில் செயலற்றதாக இருந்தால், அதன் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படும் என்ற புதிய விதிமுறையை National Payments Corporation of India அறிவித்துள்ளது.
ஏப்ரல் 1 முதல் பயன்பாட்டில் இல்லாமல் இருக்கும் மொபைல் எண்களின் யுபிஐ சேவைகள் நிறுத்தப்படுவதாக National Payments Corporation of India அறிவித்துள்ளது.
ஒருவர் தான் பயன்படுத்தும் வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்ஃபோன் எண் ஏதேனும் ஒரு காரணத்தால் செயல்படாமல் போயிருந்தால், அந்த வங்கிக் கணக்கோ அல்லது அதனுடன் இணைக்கப்பட்டிருக்கும் கூகுள் பே, போன் பே-வின் யுபிஐ ஐடிகளோ முடக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புதிய விதிமுறை ஏப்ரல் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது. இந்த விதிமுறயைல், ஒருவர் வங்கிக் கணக்குத் தொடங்கும் போது கொடுத்த செல்போன் எண்ணை தற்போது அவர் பயன்படுத்தாமல் இருந்தால், அந்த வங்கிக் கணக்கே முடக்கப்படும் அபாயம் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண் பயன்பாட்டில் இல்லாமலோ அல்லது அந்த எண் 90 நாள்களுக்கும் மேல் செயல்பாட்டில் இல்லாமல் இருந்து அது புதிய செல்போன் பயனர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டிருந்தாலோ, அந்த எண் இணைக்கப்பட்டிருந்த வங்கிக் கணக்கை முடக்கி வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செயலிழக்கப்பட்ட எண்களை புதிய பயனர்களுக்கு வழங்குவதையும் பெரும்பாலும் வழக்கமாக சில நிறுவனங்கள் கொண்டுள்ளன.இவ்வாறான செயல்பாட்டின்போது, ஒரே எண்ணை புதிய பயனர் வாங்கும்போது, அந்த எண்ணின் முந்தைய பயனரின் யுபிஐ செயல்பாடுகளும் பாதிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, முந்தைய பயனரின் யுபிஐ இணைக்கப்பட்ட வங்கி கணக்குகளை தவறான நபர்கள் பயன்படுத்துவதற்கும் வழிவகுக்கும்
இதனைத் தவிர்க்க தங்களது வங்கிக் கணக்குகளுடன் இணைக்கப்பட்டிருக்கும் செல்போன் எண்ணை உறுதி செய்து கொண்டு, அது பழைய எண்ணாக இருந்தால், உடனடியாக வங்கிக்குச் சென்று பழைய எண்ணை மாற்றிவிட்டு தற்போது பயன்படுத்தும் புதிய எண்ணைக் கொடுத்துவிட்டால் போதும் அவ்வளவுதான்
Tags: தொழில்நுட்பம் முக்கிய செய்தி