Breaking News

பெங்களூர் கோவில் திருவிழாவில் 150 அடி உயரம் கொண்ட தேர் விழுந்து விபத்து ஒருவர் பலி முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெங்களூர் கோவில் திருவிழாவில் 150 அடி உயரம் கொண்ட தேர் விழுந்து விபத்து ஒருவர் பலி முழு விவரம்

கர்நாடகாவில் கோயில் திருவிழாவின்போது தேர் சாய்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்தார். 

ஓசூர் அடுத்து கர்நாடகாவில் அமைந்துள்ள ஹுஸ்கூர் கிராமத்தில் பழமை வாய்ந்த மத்தூரம்மா அம்மன் கோயில் அமைந்துள்ளது. கோவில் திருவிழாவையொட்டி 120 அடி உயரம் கொண்ட இரண்டு தேர்களை திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.இந்த நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது பலத்த காற்று வீசியது. இதனை யாரும் எதிர்பார்க்கவில்லை

அப்போது பலத்த காற்று வீசியதால் எதிர்பாராத விதமாக 2 தேர்களின் குடையும் சாய்ந்தது. இதில் லோஹித் என்பவர் உயிரிழந்தார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். கடந்தாண்டும் இதேபோல் 150 அடி உயரம் கொண்ட தேரின் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானது குறிப்பிடத்தக்கது.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1903742494959100242

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback