Breaking News

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் 4 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் - வானிலை மையம்  எச்சரிக்கை

வடக்கு உள் கர்நாடகா முதல் தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்நாட்டின் ஒருசிலப் பகுதிகளிலும், புதுவை, காரைக்கால் உள்ளிட்டப் பகுதிகளிலும் இன்று இடி, மின்னலுடன் கூடிய லோசானது முதல் மிதமான மழைப் பெய்ய வாய்ப்பு உள்ளது. கோவை, நீலகிரி, திருப்பூர், திண்டுக்கல், தேனி, ஈரோடு, தருமபுரி, கிருஷண்கிரி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஒருசில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சென்னையில் வாகனம் ஒருசில இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஓரிரு பகுதிகளில் இடி, மின்னலுடன் மூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று குறிப்பிட்டுள்ள வானிலை ஆய்வு மையம், வெப்பநிலையானது அதிகபட்சமாக 34 முதல் 35 டிகிரி செல்சியஸ் வரையும், குறைந்தபட்சமாக 25 முதல் 26 டிகிரி செல்சியஸ் வரையும் இருக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback