ஏப்ரல் 1 முதல் தமிழகத்தில் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1-ம் தேதி மற்றும் சில சுங்கசாவடிகளிலும் செப்டம்பர் 1-ம் தேதி மற்ற சுங்கச்சாவடிகளிலும் கட்டணத்தை மாற்றி அமைப்பது வழக்கம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 40 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் ரூ.5 முதல் ரூ.25 வரை கட்டணம் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்தின் கீழ் 78 சுங்கச்சாவடிகள் செயல்பாட்டில் உள்ளனகடந்த 2 ஆண்டுகளில் மட்டும் 12 சுங்கச்சாவடிகள் புதிதாக திறக்கப்பட்டன. இந்த நிலையில், தமிழகத்தில் சுங்க சாவடி கட்டனம் உயர்த்தப்படவுள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 1 முதல் 40 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது
சுங்கச்சாவடி கட்டணம் ரூ.5 முதல் ரூ.25 வரை உயர்த்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏப்ரல் 1ம் தேதி 40 சுங்க சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படும் நிலையில், எஞ்சி உள்ள 38 சுங்கச்சாவடிகளில் 2ம் கட்டமாக செப்டம்பர் 1 முதல் கட்டணம் உயர்த்தப்படும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்படுவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.
Tags: தமிழக செய்திகள்