இனி சென்னையில் ஒரே டிக்கெட்டில் ,பஸ், ரயில்,மெட்ரோவில் பயணிக்கலாம் - சிங்காரச் சென்னை ஸ்மார்ட் அட்டை பெறுவது எப்படி Singara Chennai Smart Card
பஸ், ரயில், மெட்ரோவுக்கு ஒரே அட்டை சிங்கார சென்னை கார்டை பெறுவது எப்படி?
சிங்கார சென்னை கார்டு என்றால் என்ன:-
சென்னையில் பொதுமக்கள் பயன்பாட்டு போக்குவரத்திற்க்கு பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்று வசதி உள்ளது அதில் மக்கள் பயனம் செய்ய அனைத்திற்க்கும் தனி தனியாக பயனசீட்டு வாங்கவேண்டும்
இந்நிலையில் மக்கள் போக்குவரத்து பயணங்களை எளிமையாக்க சிங்காரச் சென்னை அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த சிங்கார சென்னை கார்டை பயன்படுத்தி பேருந்து, மின்சார ரயில் மற்றும் மெட்ரோ ஆகிய மூன்றிற்கும் பயணசீட்டாக ஒரே கார்டை பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிங்கார சென்னை கார்டு சிறப்பம்சம்:-
ஸ்டேட் பேங்க் அப் இந்தியா வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த சிங்கார சென்னை அட்டையை மும்பை, பெங்களூரு, டெல்லி உள்பட இந்தியாவில் உள்ள அனைத்து மெட்ரோக்களிலும் பயன்படுத்த முடியும்.
குறிப்பிட்ட தொகையை ரீசார்ஜ் செய்து அட்டையை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். மெட்ரோவோ, லோக்கல் ரயிலோ அல்லது பேருந்தோ அங்கு மெஷினில் ஸ்வைப் செய்தால் பயணத்துக்கான கட்டணம் எடுத்துக்கொள்ளப்படும்.
இதன்மூலம் டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் காத்திருக்க தேவையில்லை. கார்டில் உள்ள பணம் காலியானதும் மீண்டும் ரீசார்ஜ் செய்துகொள்ளலாம்.இதுபோக, சிங்கார சென்னை அட்டையை டெபிட் கார்டு ஆகவும் பயன்படுத்த முடியும். எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் இதனை டெபிட் கார்டாக பயன்படுத்திக் கொள்ளலாம்
ஏற்கனவே அனைத்து இடங்களிலும் யுபிஐ வசதி மூலம் டிக்கெட் பெறும் முறை நடைமுறைக்கு வந்துவிட்டது. மெட்ரோ ரயில் சேவையில் whatsapp மூலம் நாம் டிக்கெட் பெற முடியும். இதே போல் புறநகர் ரயில் நிலையங்களில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மூலம் பயணம் செய்யும் இடத்துக்கு நாம் சுயமாகவே டிக்கெட் எடுத்துக் கொள்ளலாம். என்பது குறிபிடத்தக்கது.
Tags: தமிழக செய்திகள் முக்கிய செய்தி
