வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் சார்பாக சவூதி வாழ் தமிழ் மன்றம் தமிழக அரசுக்கு வைக்கும் கோரிக்கைகள் முழு விவரம் Saudi Living Tamil Forum
அட்மின் மீடியா
0
வெளிநாடு வாழ் தமிழ் மக்கள் சார்பாக சவூதி வாழ் தமிழ் மன்றம் சமர்ப்பிக்கும் கோரிக்கை
வளைகுடா தொழிலாளர்கள் சந்திக்கும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பிரச்சினைகளை கேட்டு அவற்றிற்கேற்றவாறு உதவிட வளைகுடா நாடுகளின் விடுமுறை நாட்களாள வெள்ளிக்கிழமைகளில் இந்திய மற்றும் தமிழக அரசும் இணைத்து சிறப்பு மாதந்தோறும் குறை தீர்க்கும் நாள் முகாம்களை தொடர்ந்து ஆன்லைன் மூலம் நடத்தி தொழிலாளர்கள் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்க வழிவகை செய்தல் வேண்டும்
தமிழ் மொழிப் பாடத்திட்டத்தை திறம்பட தொடர்வதற்கும் மாணவர்களின் கற்றல் செயல்பாட்டில் ஆதரவளிப்பதற்கும் சவூதி அரேபியாளின் உள்ள தமிழ் மாணவர்களுக்கு உரிய நேரத்தில் தமிழ் புத்தகங்ளை தமிழ்நாடு அரசு வழங்க வேண்டும்
சவூதி அரேபியாவில் உள்ள CBSEளின் பாடத்திட்டத்தில் தமிழ் மொழியை முதலாம் வகுப்பு முதல் விருப்ப மொழியாக சேர்க்க வேண்டும் தற்போது தமிழ்மொழி பாடமாக வகுப்பிலிருந்து மட்டுமே கற்பிக்கப்படுகிறது முதலாம் வகுப்பிலிருந்து சேர்க்கும் பட்சத்தில் சிறு வயதிலேயே குழந்தைகள் தாய்மொழியை சுலபமாக கற்கவும் ஆழமாக புரிந்துகொள்ளவும் அதிக வாய்ப்புகள் உருவாகும். இந்தியாக தூதரக கவனத்திற்கு தமிழ் நாடு அரசு எடுத்து செல்ல வேண்டும்.
வெளிநாட்டில் வேலை தருவதாக கூறி போலி ஏஜெண்ட்களால் ஆயிரக்கணக்கானோர் அய்வப்போது ஏமாற்றப்படுகின்றனர் அவர்களை கண்டறிந்து அவ்வகையான செயல்கள் நடைபெறாமல் இருக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உம்ரா ஹஜ் புனிதப் பயணத்தின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட சேவைகளை வழங்கத் தவறி யாத்ரீகர்களை குறிப்பாக முதியவர்களைச் சுரண்டிக் கொண்டிருக்கும் மோசடி உம்ரா ஹஜ் முகவர்கள் தொடர்பான வழக்குகள் தமிழ்நாடு முழுவதும் அடுகரித்து வருவதை உங்கள் உடனடி கவனத்திற்குச் கொண்டு வருகின்றேன் இந்த ஏஜெண்டுகள் அவர்களில் முறையான அங்கீகாரம் இல்லாமல் துணை முகவர்களாக செயல்படுகின்றனர்
வளைகுடா நாடுகளில் படிக்கும் மாணவர்கள் +2 படிந்து தாயகம் திரும்பும் போது அவர்கள் உயர்கல்வி தொட மிகுந்த சிரமத்துக்குள்ளாகிறார்கள் அவர்களுக்கே தனி உயர்கல்வி திட்டத்தை உருவாக்க வேண்டும்
தமிழ் இணையக் கல்விக்கழகம் TAMIL VIRTUAL ACADEMY மையங்கள் சவூதிஅரேபியாவில் அமைக்கப்படவேண்டும். அதில் வெளிநாட்டு தமிழ் மாணவர்கள் பங்குகொள்ள போதிய விழிப்புணர்வு எற்படுத்த வேண்டும்.
குடும்ப விசாவில் உள்ள பெண்கள் சவூதி அரசி சட்ட அனுமதியோடு ஆசிரியர்களாக செவிலியர்களாக சவூதி அரேபியாவில் பணி செய்கின்றனர். அவர்களையும் அயலகதமிழர் நலன் வாரியத்தில் பதிவு செய்ய வழி வகை செய்ய வேண்டும்
அயலக தமிழர் நலன் அமைச்சகம் சார்ந்த அமைச்சர் அல்லது அரசு அதிகாரிகள் குறைந்தது மோதங்களுக்கு ஒரு முறையாவது சவூதி அரேபியாவுக்கு வருகை தந்து இங்குள்ள இந்திய தூதரகத்தில் தமிழ நலன் சார்ந்த விஷயங்களை முன்னெடுக்க வேண்டும்.
சவூதி வாழ் தமிழர்கள் விடுமுறையில் தாயகம் சென்று திரும்ப நேரடி விமான சேவை மற்றும் ஜித்தாவுக்கு தொடங்க அரசு ஆவணச்செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
