பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து மருத்துவமனையில் அனுமதி நடந்தது என்ன முழு விவரம் Saif Ali Khan Attacked
பிரபல ஹிந்தி திரைப்பட நடிகர் சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து மருத்துவமனையில் அனுமதி நடந்தது என்ன முழு விவரம் Saif Ali Khan Attacked
மும்பையில் பிரபல நடிகர் சைஃப் அலிகானை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தியதில் பலத்த காயமடைந்தார்.
\சைஃப் அலி கானின் வீட்டுக்குள் நுழைந்து அவரது வீட்டு உதவியாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் என்றும் அப்போது , சைஃப் அலிகான் தலையிட முயன்றபோது, அந்த நபர் அவரைத் தாக்கினார் என்றும் மும்பை காவல்துறை கூறியதாக செய்தி நிறுவனமான ஏஎன்ஐ குறிப்பிடுகிறது.
அதைத் தடுக்கவந்த சைஃப் அலிகானை அந்த மர்ம நபர் கத்தியால் தாக்கியுள்ளார். இதில், சைஃப் அலிகான் பலத்த காயம் அடைந்ததாக கூறப்படுகிறது.
காயமடைந்த நடிகர் சைஃப் அலிகான் தற்போது மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாந்த்ரா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளன.
2012 ஆம் ஆண்டு பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்த சைஃப் அலிகான் மும்பையின் பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள சத்குரு ஷரண் குடியிருப்பில் வசித்து வருகிறார். இவர்களுக்கு தைமூர், ஜெஹ் என்ற இரு மகன்கள் உள்ளனர்.
இதுகுறித்து மருத்துவமனை தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் நீரஜ் உத்தாமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"சைஃப் அவரது வீட்டில் அடையாளம் தெரியாத நபரால் தாக்கப்பட்டார். அவர் காலை 3.30 மணியளவில் லீலாவதி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருக்கு ஆறு இடங்களில் காயங்கள் ஏற்பட்டுள்ளன, அதில் இரண்டு ஆழமான காயங்கள் உள்ளன. ஒரு காயம் முதுகுத்தண்டின் அருகே உள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.மேலும், காலை 5.30 மணிக்கு அவருக்கு அறுவை சிகிச்சை தொடங்கப்பட்டதாக மருத்துவமனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நிதின் டாங்கே, காஸ்மெடிக் சர்ஜன் டாக்டர் லீனா ஜெயின், மயக்க மருந்து நிபுணர் டாக்டர் நிஷா காந்தி ஆகியோர் அறுவை சிகிச்சை மேற்கொண்டு வருகின்றனர். இந்த காயம் எவ்வளவு ஆழமானது என்பது அறுவை சிகிச்சைக்குப் பிறகு தெரியவரும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags: இந்திய செய்திகள்