Breaking News

கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்! Masks Mandatory In Karnataka

அட்மின் மீடியா
0
கர்நாடகாவில் மாஸ்க் அணிவது கட்டாயம்! Masks Mandatory In Karnataka
பெங்களூருவில் இரண்டு குழந்தைகளுக்கு HMPV தொற்று உறுதியான நிலையில், கர்நாடக மாநிலத்தில் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய அறிவுறுத்தல்

இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரில் இரு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கர்நாடகா அரசு முக்கிய செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் பொது இடங்களுக்குச் செல்லும்போது முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும். கூட்ட நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிவதன் மூலம் தொற்று பரவலைக் குறைக்க முடியும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது

முதல்வர் சித்தாராமய்யா இது குறித்து "இரண்டு குழந்தைகளுக்கு எச்.எம்.பி.வி. தொற்று கண்டறியப்பட்டுள்ளது. எனக்கு இது தெரிந்தவுடன், தினேஷ் குண்டு ராவிடம் பேசியதில் அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார். அவர் எடுக்கும் முடிவுகள் அனைத்தும் செயல்படுத்தப்படும். நோய் பரவலைத் தடுக்க அரசு அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும்" எனக் கூறியுள்ளார். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback