காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் , இஸ்ரேல் ஏற்றதாக தகவல் Israel-Hamas War: Gaza ceasefire agreement
காஸாவில் விரைவில் போர்நிறுத்தம்! இறுதி வரைவு அறிக்கையை ஹமாஸ் , இஸ்ரேல் ஏற்றதாக தகவல் Israel-Hamas War: Gaza ceasefire agreement
காஸாவில் போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்ய இஸ்ரேலும் ஹமாஸ் பிரதிநிதிகள் கத்தாரில் மீண்டும் கூடியுள்ளனர்.
காஸாவில் இஸ்ரேலுக்கும் ஹமாஸ் படைக்கும் இடையிலான போர் நிறுத்தப் பேச்சுவார்த்தையில் முதல் முறையாக, இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் பிரதிநிதிகள் அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகிய நாடுகள் மத்தியஸ்தம் செய்து வருகின்றன. மூன்றாம் தரப்பு மத்தியஸ்தர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது.
போர்:-
2023-ஆம் ஆண்டு, அக்டோபர் 7-ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர். 251 பேர் பணயக்கைதிகளாக காஸாவுக்கு கொண்டு செல்லப்பட்டதால் போர் வெடித்தது
இதற்கு பதிலடியாக ஹமாஸை அழிக்க இஸ்ரேல் காஸா மீது ராணுவ தாக்குதலை நடத்தியது.இந்த போரின் போது 46,500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம், கூறுகிறது.
பேச்சு வார்த்தை:-
அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் வரும் 20-ம் தேதி பதவி ஏற்பதற்கு முன்பாக ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்
மேலும் டிரம்பால் நியமிக்கப்பட்ட மத்திய கிழக்குத் தூதர் ஸ்டீவ் விட்கோஃப் என்பவரும் கத்தாரில் நடந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்.
இஸ்ரேலின் வெளியுறவுத்துறை அமைச்சர் கிடியன், இந்த ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், "முன்பை விட இம்முறை மிகவும் சிறப்பாக இருந்தது" என்றும் தெரிவித்துள்ளார்.
கத்தாரின் வெளியுறவுத்துறை செய்தித்தொடர்பாளர் மஜீத் அல்-அன்சாரி, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, பேச்சுவார்த்தை நேர்மையாகவும் பயனுள்ளதாகவும் நடந்து வருகிறது என்றார். ஆனாலும் அதன் விவரங்களைத் கூற மறுத்துவிட்டார்.
போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்த இறுதி வரைவு அறிக்கை இஸ்ரேல், ஹமாஸ் பேச்சுவார்த்தைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும், இதனைத்தொடர்ந்து மேற்கண்ட இரு பிரிவு தலைவர்களும் இந்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிக்கும்பட்சத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் இறுதி வடிவம் பெறும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
போர் நிறுத்த ஒப்பந்தம்:-
போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளுமாறு ஹமாஸ் தரப்புக்கு கத்தார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாகவும், இன்னொருபுறம் இஸ்ரேல் தரப்புக்கு அமெரிக்காவிடமிருந்து அழுத்தம் தரப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவில் ஹமாஸ் படையினர் பிணைக் கைதிகளாகச் சிறைப்பிடித்து வைத்துள்ள இஸ்ரேல் மக்கள் விடுவிக்கப்பட வேண்டும், இஸ்ரேல் படைகள் காஸாவிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட வேண்டும் ஆகிய இவ்விரு விவாதங்களும் அமைதிப் பேச்சுவார்த்தையில் விவாதிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்தத்தின் முதல் நாளில் ஹமாஸ் மூன்று பணயக்கைதிகளை விடுவிக்கும் என்றும், அதன் பிறகு மக்கள் வசிக்கும் பகுதிகளிலிருந்து இஸ்ரேல் அதன் படைகளை திரும்பப் பெறத் தொடங்கும் என்றும் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டனர்.
ஏழு நாட்களுக்குப் பிறகு, ஹமாஸ் கூடுதலாக நான்கு பணயக்கைதிகளை விடுவிக்கும், மேலும் தெற்கு காஸாவுக்கு இடம்பெயர்ந்த மக்களை மீண்டும் வடக்கு பகுதிக்கு திரும்ப இஸ்ரேல் அனுமதிக்கும்.
ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்ட முதல் 42 நாட்களுக்கு இஸ்ரேல் படைகள் பிலடெல்பி பாதையில் தொடர்ந்து இருப்பதற்கும், கிழக்கு மற்றும் வடக்கு எல்லைகளில் 800 மீட்டர் தூரத்தை ராணுவ நடவடிக்கையற்ற பகுதியாக வைத்திருப்பதற்கும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளது.
1,000 பாலஸ்தீன கைதிகளை விடுவிக்கவும் இஸ்ரேல் ஒப்புக்கொண்டுள்ளது. இவர்களுள் 15 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட காலமாக சிறை தண்டனை அனுபவித்து வரும் சுமார் 190 நபர்கள் அடங்குவர்.
இதற்கு ஈடாக ஹமாஸ் 34 பணயக்கைதிகளை விடுவிக்கும். ஒப்பந்தத்தின் இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்டங்களுக்கான பேச்சுவார்த்தைகள் போர் நிறுத்தத்தின் 16வது நாளில் தொடங்கும்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
