Breaking News

அலர்ட் HMPV வைரஸ் தொற்று பெங்களூருவில் இரு குழந்தைகளுக்கு சிகிச்சை முழு விவரம் hmpv virus in india

அட்மின் மீடியா
0

அலர்ட் சீனாவில் பரவிய HMPV வைரஸ் தொற்று பெங்களூருவில் இரு குழந்தைகளுக்கு சிகிச்சை முழு விவரம்

சீனாவில் தற்போது அதிகம் பரவி வரும் HMPV வைரஸ், தற்போது இந்தியாவில் முதல்முறையாக பெங்களூரில் 3 மாதம் மற்றும் 8 மாத 2 குழந்தைக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தை மற்றும் குடும்பத்தினர் சமீபத்தில் எங்கும் வெளிநாடு பயணம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது



அந்த குழந்தையின் பெற்றோர் இதுவரை சீனாவிற்கு செல்லாத நிலையில், அந்த குழந்தைக்கு எப்படி HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 

இந்த குழந்தைக்கு கடந்த 02ம் தேதி பரிசோதனை செய்யப்பட்ட நிலையில், HMPV வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த குழந்தையிடம் எடுக்கப்பட்டுள்ள சோதனை மாதிரிகள் மத்திய அரசின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.

பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை' என கர்நாடகா மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது

சீனாவின் வூகான் மாநிலத்தில் கடந்த 2019ம் ஆண்டு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி ஓர் ஆட்டம் காட்டியது. அதன்பின்பு கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு இந்த வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டது. கொரானா வந்து சுமார் 5 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் தற்போது சீனாவில் Human Meta-Pneumo Virus (HMPV) ஹியூமன் மெட்டாநியூமோவைரஸ் (HMPV)  ஹெச்.எம்.பி.வி வைரஸ் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.hmpv virus in india



சீனாவில் நிமோனியா காய்ச்சல் திடீரென அதிகரித்து வந்த நிலையில், காரணம் தெரியாமல் கண்காணித்து வந்த அந்நாட்டின் நோய்கள் கட்டுப்பாட்டு ஆணையம், ஹெச்.எம்.பி.வி வைரஸ் காரணமாகவே நிமோனியா பாதிப்பு அதிகரித்து வருவதாக கூறியுள்ளது.

சீனாவை தாக்கி வரும் இந்த நோய் காரணமாக அங்குள்ள மருத்துவமனைகள் நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன.

ஹெச்.எம்.பி.வி வைரஸ் கடந்த 2001ல் முதன்முதலாக நெதர்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. அப்போதே இந்த வைரஸ் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. குறிப்பிடத்தக்கது.

HMPV வைரஸ் என்பது Human Metapneumovirus என்பதின் சுருக்கம் ஆகும்; இதுவும் கொரோனா போலவே, மூச்சுக்குழலை பாதிக்கும் ஒரு வகையான வைரஸ் ஆகும்; சீனாவின் வடக்கு பகுதிகளில் இது அதிகம் பரவுகிறது


இந்த வைரஸ் நோய், எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள குழந்தைகள் மற்றும் முதியவர்களை பாதிக்கும் சுவாச வைரஸான இது சீன மக்களை பெரிய அளவில் பயமுறுத்தி வருகிறது.

இந்த வைரஸுக்கு தற்போது குறிப்பிட்ட தடுப்பூசி அல்லது மருந்து எதுவும் இல்லை என்பதால், அறிகுறிகளைக் கட்டுப்படுத்துவதன் அடிப்படையில் மட்டுமே அதன் சிகிச்சை செய்யப்படுகிறது என்கின்றனர் மருத்துவர்கள்

மேலும் இது கொரோனா போன்ற பெருந்தொற்றை மீண்டும் ஏற்படுத்துமோ என்னும் அச்சம் உலக மக்களிடையே நிலவிவருகிறது

அறிகுறிகள்:-

இருமல், காய்ச்சல், மூக்கடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான முக்கிய அறிகுறிகளாக சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. 

மூச்சுக் குழாய் அழற்சி அல்லது நிமோனியா பாதிப்பும் கூட அறிகுறிகளாக ஹெச்.எம்.பி.வி வைரஸ் தாக்குதலுக்கான அறிகுறிகளாக இருப்பதாக சீன மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இருமல் அல்லது தும்மலில் இருந்து வெளிவரும் நீர்த்துளிகள் மூலமாகப் பரவுவதாகவும் கூறியுள்ளனர். 

தற்காப்பு:-

நோய் தாக்குதலில் இருந்து தப்பிக்க, மீண்டும் கொரோனா காலத்தைப் போல மாஸ்க் அணிவது, சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, அடிக்கடி கைகளைக் கழுவுதல், கூட்ட நெரிசலான பகுதிகளுக்குச் எல்வதைத் தவிர்ப்பது என்று கொரோனா கால நடைமுறைகளை இப்போது சீனர்கள் மீண்டும் கடைபிடித்து வருகின்றனர்.

இருப்பினும், கொரோனா போல இது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்றும், மழைக்கால, குளிர் காலத்தில் ஏற்படும் பாதிப்பு போன்றதுதான் HMPV வைரஸ் என்று சீன அதிகாரிகள், உலக சுகாதார மைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback