மஹிந்திராவின் புதிய electric கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கலாம் ! XEV 9 காரின் சிறப்பம்சங்கள்
மஹிந்திராவின் புதிய electric கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கி.மீ வரை பயணிக்கலாம் ! XEV 9
முழுக்க முழுக்க தமிழ்நாட்டில் வடிவமைத்து தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்ட , மகேந்திரா நிறுவனத்தின் மின்சாரக் கார்களான XEV 9 மற்றும் BE 6 கார்களின் வாடிக்கையாளர் சோதனை ஓட்டத்தை சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
காரின் சிறப்பம்சங்கள்:-
கார்களின் பேட்டரி பாஸ்ட் சார்ஜிங் அம்சத்தில் 20 நிமிடத்தில் 80 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும் ,
முழு அளவில் சார்ஜ் 500 கி.மீ தூரம் வரை செல்லும்.
5 பேர் தாராளமாக அமர்ந்து செல்லலாம்
மிகவும் தாராளமாக உள்ள டிக்கி Boot Space 663 Litres ஆகும்
குறைத்த நேரத்தில் சார்ஜ் ஆவதும் , அதிக தூரம் செல்வது இரண்டும்தான் இந்த கார்களின் சிறப்பம்சம்.
Virtual auto park வசதி உள்ளது. காரை விட்டு இறங்கி வெளியில் சென்று VAP மோடை அழுத்தினால் கார் தானியங்கி முறையில் முன்னோக்கி, பின்னோக்கி நகர்ந்து அதுவே பார்க்கிங் ஆகி கொள்ளும். ஒருவேளை பார்க்கிங் அவதை தடுக்கும் வகையில் ஏதேனும் பொருட்கள் இருந்தால் அது குறித்து சத்தம் எழுப்பி எச்சரிக்கை செய்துவிடும்.
இந்த கார்களில் 12 ultaras sonic சென்சார்கள், 6 கேமிரா, 5 ரேடார்கள் உள்ளன. வாகனத்தை ஓட்டிச் செல்லும் ஓட்டுநரின் கருவிழியை கவனிக்கும் வகையில் கேமராக்கள் உள்ளன, ஓட்டுநர் நேராக சாலையை பார்க்காமல் வேறு எங்கும் பார்த்தால், எச்சரிக்கை செய்வதுடன் ஸ்டியரிங் தானாகவே அசைந்தும், திரும்பியும் சரியான பாதையில் கார் செல்வதை உறுதி செய்யும்.
XEV 9 e கார்கள் 39.5 லட்சமும் , BE 6 கார்கள் 26.9 லட்சமும் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
வீடுகளில் Ac power charge முறையில் சார்ஜ் செய்ய முடியும் .
Key features of Mahindra XEV 9e
Power Steering
Anti-lock Braking System (ABS)
Air Conditioner
Driver Airbag
Passenger Airbag
Automatic Climate Control
Alloy Wheels
Multi-function Steering
Wheel Engine
Start Stop Button
Tags: தொழில்நுட்பம்
