Breaking News

தமிழகத்தின் முதல் முறையாக சென்னை ஈ.சி.ஆர் இல் மிதவை படகு உணவகம் வீடியோ பார்க்க ECR Boat house video

அட்மின் மீடியா
0

தமிழகத்திலேயே முதன்முறையாக சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள முட்டுக்காடு என்ற இடத்தில் மிதக்கும் உணவுப் படகு இன்று  பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.



செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் சட்டமன்றத்தொகுதி உட்பட்ட திருப்போரூர் ஒன்றியம் முட்டுக்காடு ஊராட்சி தமிழ்நாடு சுற்றுலா துறை சார்பில் முட்டுக்காடு ஊராட்சியில் பிரமாண்டமான மிதவை படகு  உணவகம் கட்டுமான பணி துவக்க விழாவை அமைச்சர் மாண்புமிகு  சுற்றுலா துறை அமைச்சர் மாண்புமிகு கே.ராமசந்திரன் அவர்கள் கடந்த ஆண்டு துவக்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் முதன் முறையாக  செங்கல்பட்டு மாவட்டம் முட்டுக்காட்டில் மிதவை உணவகம் அமையவுள்ளது. முட்டுக்காடு ஏரியில் பயணித்தவாறு அந்த உணவகத்தில் அமர்ந்து சுற்றுலா பயணிகள் உணவருந்தலாம்.

மிதவை உணவகம் சிறப்பம்சங்கள்:-

125 அடி நீளம் 25 அடி அகலத்தில் 2 அடுக்குகளை கொண்டிருக்கும்

தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதி

இந்த படகில் சமையலறை, கழிவறை உள்ளிட்ட வசதிகள் இடம்பெற உள்ளது.

ஏரியில் நீரின் ஆழம் குறைவாக இருந்தால் கூட அந்த படகு மிதக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகின்றது

வீடியோ பார்க்க:-

https://twitter.com/Kishoreamutha/status/1639118136447488001

FLOATING RESTAURANT முட்டுக்காடு ஏரியில் ₹5 கோடி செலவில் அமைக்கப்பட்டுள்ள மிதவை படகு உணவகம் இன்று மாலை 5 மணிக்கு திறப்பு. 

2 அடுக்குகள், 125 அடி நீளம், 25 அடி அகலம் கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் உணவக கப்பலை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைக்கவுள்ளார்

இந்த மிதக்கும் உணவுக் கப்பலில் மிதந்தபடி உணவு உண்ணும் போது சென்னைவாசிகள் புதிய அனுபவத்தைப் பெற முடியும் என்றும், சென்னை மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback