Breaking News

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு! Canada's PM Justin Trudeau announces resignation

அட்மின் மீடியா
0

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு! Canada's PM Justin Trudeau announces resignation

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவிப்பு!

லிபரல் கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கட்சியின் அடுத்த தலைவர் தேர்வு செய்யப்படும் வரை தற்காலிகமாக பிரதமராக தொடர்வதாக ஜஸ்டின் ட்ரூடோ அறிவிப்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் பிரதமர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.

அவரது கட்சிக்கு புதிய ஜனநாயக கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.வரும் 8ம் தேதி கட்சியின் உயர்மட்டக் குழு கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் புதிய பிரதமர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

இது குறித்து ஜஸ்டின் ட்ரூடோ 

நான் கட்சித் தலைவர் பொறுப்பிலிருந்தும், பிரதமர் பொறுப்பில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன். எனக்கு அடுத்ததாக தலைமை வகிக்கும் நபரை கட்சி தேர்வு செய்ததை தொடர்ந்து இந்த முடிவை எடுத்து உள்ளேன். 

வரும் தேர்தலில் சிறந்த ஒருவரை பிரதமராக கனடா தேர்வு செய்யும். உட்கட்சி மோதலில் ஈடுபட்டால் அந்தத் தேர்தலில் நான் சிறந்த தேர்வாக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்..

கன்சர்வேட்டிவ் கட்சியை சேர்ந்த ஜஸ்டின் ட்ரூடோ 2015 ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்புக்கு வந்தார். 10 ஆண்டுகளாக தொடர்ந்து அவர் கனடா பிரதமராக இருந்து வந்த நிலையில் தற்போது அவர் ராஜினாமாவை அறிவித்திருக்கிறார்.

Tags: வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback