தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு - வெளியுறவுத் துறை அறிக்கை taliban india
அட்மின் மீடியா
0
தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ சந்திப்பு - வெளியுறவுத் துறை அறிக்கை taliban india
தாலிபான் அமைப்புடன் அதிகாரப்பூர்வ உயர்மட்ட சந்திப்பை நடத்தியுள்ளது இந்திய அரசு.
துபாயில் தாலிபான் வெளியுறவு அமைச்சர் மவ்லவி அமீர்கான் உடன் மத்திய வெளியுறவுத்துறையின் செயலாளர் விக்ரம் மிஸ்ரி இருதரப்பு விவகாரங்கள், பிராந்தியப் பாதுகாப்பு குறித்து விவாதிக்கப்பட்டதாக இந்திய வெளியுறவுத் துறை கூறியுள்ளது
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மேம்பாட்டு உதவிகளை தொடர்ந்து வழங்குவதற்கான தனது உறுதிப்பாட்டை இந்தியா மீண்டும் வலியுறுத்தியது. சபாஹர் துறைமுகம் உட்ப வர்த்தகத்தை மேம்படுத்த ஒப்புக்கொண்டது. சுகாதாரத் துறைக்கும், நாட்டில் அகதிகளின் மறுவாழ்வுக்கும் இந்தியா தனது ஆதரவை வழங்கும்" என்று ஜெய்ஸ்வால் கூறினார்,
மேலும் மத்திய வெளியுறவுத்துறையின் அறிக்கையில்:-
ஆப்கானிஸ்தானின் வேண்டுகோளின்படி, சுகாதாரத் துறையை மேம்படுத்தவும், அகதிகள் மறுவாழ்வுக்கு ஆதரவளிக்கவும் இந்தியா கூடுதல் உதவிகளை வழங்கும். ஆப்கானிஸ்தான் இளைஞர்களிடையே மிகவும் பிரபலமான கிரிக்கெட் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் இரு தரப்பும் பேசியதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசை இந்தியா இதுவரை அங்கீகரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய வெளியுறவுச் செயலர் விக்ரம் மிஸ்ரி புதன்கிழமை துபாயில் தலிபான் பாதுகாப்பு அமைச்சர் முத்தாக்கியை சந்தித்தார். கூட்டத்தின் புகைப்படங்களை வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் X இல் பகிர்ந்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
