பொருளாதார அழுத்தங்கள் கொடுத்து அமெரிக்காவுடன் கனடாவை இணைத்து விடுவேன்- டொனால்டு டிரம்ப்
பொருளாதார அழுத்தங்கள் கொடுத்து அமெரிக்காவுடன் கனடாவை இணைத்து விடுவேன்- டொனால்டு டிரம்ப்
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதாக நேற்று முன் தினம் அறிவித்திருந்தார் மேலும் தமது கட்சி அடுத்த தலைவரை தேர்ந்தெடுக்கும் வரை பதவியில் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கனடா பிரதமர் ட்ரூடோ பதவி விலகுவதாக அறிவித்த சில மணி நேரங்களில் இது குறித்து பேசிய அமெரிக்காவின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப், கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாநிலமாக இணைத்துக் கொள்வதாக விருப்பம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்டு டிரம்ப்:-
அமெரிக்காவின் 51 ஆவது மாநிலமாக கனடா தேர்வு செய்யப்படுவதற்கு கனடா மக்கள் பலர் விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் கனடா அமெரிக்காவுடன் இணைந்தால், கட்டணங்கள் இருக்காது, வரிகள் குறைக்கப்படும். தொடர்ந்து கனடாவை சுற்றி நிற்கும் ரஷ்யா, சீனா கப்பல்களின் மூலம் விடுக்கப்படும் அச்சுறுத்தலில் இருந்து பாதுகாக்கலாம். அமெரிக்காவுடன் இணையும் பட்சத்தில் ஒரு சிறந்த தேசமாக திகழும்,"என்றும் கூறியுள்ளார்.
Tags: வெளிநாட்டு செய்திகள்
