அரையாண்டு விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை
அரையாண்டு விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் - பள்ளி கல்வித்துறை
தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதியுடன் அரையாண்டு தேர்வு முடிந்தது. அதனை தொடர்ந்து டிசம்பர் 24ந் தேதி முதல் 2025 ஜனவரி 1ந் தேதி வரை விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து பள்ளிகள் திறப்பு நாளைக்கு பதிலாக நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் அரையாண்டு விடுமுறை முடிந்து திட்டமிட்டபடி நாளை பள்ளிகள் திறக்கப்படும் எனவும் இதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என - பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
அரையாண்டு விடுமுறை இன்றுடன் முடிந்த நிலையில் நாளை (ஜன.02) திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவலுக்கு பள்ளி கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது
Tags: கல்வி செய்திகள் தமிழக செய்திகள்
