Breaking News

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு முழு விபரம்

அட்மின் மீடியா
0

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு முழு விபரம்


திமுக பொதுச்செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் வீட்டில் இன்று அமலாக்கத்துறை ரெய்டு நடைபெற்று வருகிறது.வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.  அமைச்சர் துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியிலும் சோதனை நடைபெற்று வருகிறது.

அமைச்சர் துரைமுருகனும் அவரது மகனும் , திமுக எம்.பி. கதிர் ஆனந்த்தும் காட்பாடியில் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர். தற்போது, அந்த வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback