Breaking News

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை சட்டதிருத்த மசோதா முழு விவரம்

அட்மின் மீடியா
0

பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை சட்டதிருத்த மசோதா முழு விவரம்

தமிழ்நாடு சட்டப்பேரவையின் 5வது நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2025ஆம் ஆண்டு குற்றவியல் சட்டங்கள் முன்முடிவு மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்கும் சட்டத்திருத்த மசோதாவை முதலமைச்சர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிமுகம் செய்தார். 

பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் குற்றங்களை மன்னிக்க முடியாது. தண்டனைகள் கடுமையாக்கப்பட வேண்டும். அதற்காகவே இந்த சட்டத்திருத்தம் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த சட்டத்திருத்தங்கள்

பாலியல் வன்புணர்ச்சி குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- 10 ஆண்டுகள் கடுங்காவல் (குறைந்தபட்சம்) 

சட்டத்திருத்தம்:- 14 வருடங்கள் (குறைந்தபட்சம்) 

நெருங்கிய உறவினர் (அ) காவல்துறை ஊழியர் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டால் 

பழைய தண்டனை:- 10 ஆண்டுகள் கடுங்காவல் (குறைந்தபட்சம்) 

சட்டத்திருத்தம்:- 20 ஆண்டுகள் கடுங்காவல் (குறைந்தபட்சம்) 

12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது பாலியல் வன்புணர்ச்சி குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:-  20ஆண்டுகள் கடுங்காவல் (குறைந்தபட்சம்) (அ) ஆயுள் தண்டனை (அ) மரண தண்டனை 

சட்டத்திருத்தம்:- ஆயுள் (அ) மரண தண்டனை

பாலியல் வன்புணர்ச்சி மற்றும் மரணத்தை விளைவிக்கும் குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- 20 ஆண்டுகள் கடுங்காவல் (குறைந்தபட்சம்) 

சட்டத்திருத்தம்:- ஆயுள் தண்டனை

கூட்டுப் பாலியல் வன்புணர்ச்சி குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- ஆயுள் சிறை 

சட்டத்திருத்தம்:-மரண தண்டனை 

மீண்டும் மீண்டும் குற்றம் இழைத்தவர்கள் குற்றம் செய்தால்  

பழைய தண்டனை:- ஆயுள் சிறை 

சட்டத்திருத்தம்:-மரண தண்டனை 

பாலியல் தொல்லை குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- 3 ஆண்டுகள்

சட்டத்திருத்தம்:-5 ஆண்டுகள் 

பெண்ணை பின் தொடர்தல் குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- ----- NIL 

சட்டத்திருத்தம்:- முதல் முறை 5 ஆண்டுகள் சிறை, 2வது முறை 7 ஆண்டுகள் 

ஆசிட் வீச்சு குற்றம் செய்தால் 

பழைய தண்டனை:- 10 ஆண்டுகள் சிறை - ஆயுள் தண்டனை (அதிகபட்சம்)

சட்டத்திருத்தம்:- ஆயுள் (அ) மரண தண்டனை

ஆசிட் வீச முயற்சி

பழைய தண்டனை:- 5 முதல் 7 ஆண்டுகள் வரை

சட்டத்திருத்தம்:- 10 ஆண்டுகள் சிறை - ஆயுள் தண்டனை (அதிகபட்சம்)

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback