Breaking News

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அதிமுக வட்ட செயலாளர் கைது

அட்மின் மீடியா
0

அண்ணா நகர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் காவல் நிலைய ஆய்வாளர் மற்றும் அதிமுக வட்ட செயலாளர் கைது

சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். இதேபோன்று பெண் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழுவினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை போக்சோ வழக்கில் தனியார் பள்ளி முதல்வர் கைது

சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி கடந்த செப்டம்பர் மாதம் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டாள். இது தொடர்பாக பக்கத்து வீட்டு சிறுவன் மீது புகாரளிக்க, பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்றனர். அப்போது, போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்களை தாக்கியதாகவும், சிறுவனின் பெயரை புகாரிலிருந்து நீக்க வற்புறுத்தியதாகவும் சிறுமியின் பெற்றோர் வீடியோ வெளியிட்டிருந்தனர்

இந்த விவகாரம் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. இந்த வழக்கினை சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தி வருகிறது. 

இந்த நிலையில் இவ்வழக்கில் காவல் ஆய்வாளர் ராஜி என்பவரை சிறப்பு புலனாய்வு குழு இன்று கைது செய்துள்ளது. இதேபோன்று அதிமுக வட்ட செயலாளர் சுதாகர் என்பவரையும் சிறப்பு புலனாய்வு குழு கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களுக்கு உதவி செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் இருவரும் கைது செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback