திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி இல்லை..! புதிய விதிமுறை முழு விவரம்
திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி இல்லை..!புதிய விதிமுறை முழு விவரம்.
திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி மறுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் பிறந்து வளர்ந்தவர் ரித்தேஷ் அகர்வால். தனது 19 வயதில் கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு, OYO ஹோட்டல் நிறுவனத்தை ஆரம்பித்தார்.
2011 ஆம் ஆண்டு Oravel stays என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட இந்நிறுவனம், 2013 ஆம் ஆண்டு OYO Hotels & Homes என பெயர் மாற்றம் செய்யப்பட்ட உலகம் முழுவதும் 80 நாடுகளில் கிட்டத்தட்ட 800 நகரங்களில் கிளைகள் அமைத்து தங்களது சேவைகளை வழங்கி வருகிறது.
இந்நிலையில் திருமணமாகாத தம்பதிகளுக்கு இனி ஓயோவில் அனுமதி இல்லை என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. திருமணமான உரிய ஆதாரங்களோடு வருவோருக்கு மட்டுமே இனி அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதற்கட்டமாக உத்தர பிரதேசத்தின் மீரட்டில் புதிய விதி அமலாவதாகவும், கள நிலவரத்தை பொறுத்து மற்ற நகரங்களுக்கு விரிவுப்படுத்தப்பட உள்ளதாகவும் தகவல்
புதிய விதிகளின்படி ஆன்லைனில் புக் செய்த விருந்தினர்கள் உட்பட அனைவரும் செக்-இன் செய்யும் போது தங்கள் திருமணமான ஜோடிகள் தான் என்பதற்கான ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், திருமணமாகாத ஜோடிகள் என்று நினைத்தால் அவர்களை செக் இன் செய்ய அனுமதிக்கத் தேவையில்லை என்றும் இந்த முடிவை பார்ட்னர் ஹோட்டல் நிர்வாகத்தினரே எடுத்துக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
All couples will be asked to present valid proof of relationship at the time of check-in at Oyo rooms, including for bookings made online
Tags: இந்திய செய்திகள்
