Breaking News

அஜித் வாழ்க, விஜய் வாழ்க...சரி, நீங்க எப்போ வாழப்போறீங்க ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

அட்மின் மீடியா
0

அஜித் வாழ்க, விஜய் வாழ்க... சரி, நீங்க எப்போ வாழப்போறீங்க ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை

அஜித் வாழ்க, விஜய் வாழ்க... சரி, நீங்க எப்போ வாழப்போறீங்க. முதலில் உங்க வாழ்க்கையை பாருங்க..''ஆங்கில ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை




நடிகர் அஜித் குமார்.துபையில் நடைபெற்ற கார் பந்தயத்தில் பங்கேற்று 3-ஆவது இடம்பிடித்தார் இதற்க்கு பல்வேறு தரப்பினரும் பாராட்வருகின்றனர்

இந்த நிலையில், கார் பந்தயத்துக்குப்பின் அவர் அளித்துள்ள பேட்டியில்:-

`அஜித் வாழ்க, விஜய் வாழ்க... சரி, நீங்கள் எப்போது வாழப்போகிறீர்கள். முதலில் உங்களுடைய வாழ்க்கையை பாருங்கள்..'' என்று ரசிகர்களுக்கு அஜித் அறிவுரை வழங்கியுள்ளார்.

உங்களைச் சுற்றி நல்ல மனிதர்களை வைத்துக்கொள்வது முக்கியமான ஒன்று. வெற்றிக்கு தேவை விடா முயற்சி, அதேபோல, உங்கள் குடும்பம் மற்றும் அன்புக்குரியோரின் ஆதரவும் தேவை. எனது மனைவி, குழந்தைகள் மற்றும் உடன்பிறப்புகளின் ஆதரவின்றி நான் இதைச் செய்திருக்க முடியாது.

இந்த தருணத்தை அனுபவித்து வாழுங்கள். கடந்த காலத்தை ரொம்பவும் நம்பியிருக்காதீர்கள். எதிர்காலத்தைப் பற்றி ரொம்பவும் கவலைப்படாதீர்கள்.கடுமையாக உழைக்கவும், ஆரோக்கியமாக வாழவும் (உடல் ரீதியாகவும் | மன ரிதியாகவும்), பிறரிடம் அன்பாக இருங்கள்.என்னுடைய ரசிகர்கள் தங்கள் வாழ்க்கையில் நன்றாக இருக்கிறார்கள் என்பதையும், அன்புடன் இருக்கிறார்கள் என்பதையும் அறியும்போது நான் மிகுந்த சந்தோஷமடைவேன்.வாழ்க்கை கொஞ்ச காலம் மட்டும்தான், ஆகவே அதை அர்த்தமுள்ளதாக்குங்கள்!

நான் எனது ஆத்ம திருப்திக்காக தான் கார் பந்தயத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது தனக்கு இனிமையான அனுபவத்தை தருவதாக குறிப்பிட்ட நடிகர் அஜித் சாலைகளில் தாறுமாறாக வாகனங்களை இயக்கி இளைஞர்கள் பலர் விபத்துகளில் சிக்குவதை தான் பார்ப்பதாகவும், அவர்கள் தங்கள் வாழ்க்கையையும் பிறரது வாழ்க்கையையும் அபாயத்தில் தள்ளுவதகவும் குறிப்பிட்டார்

மேலும் உடல் நலனைப் போன்றே மன நலனும் முக்கியமானதே. சமூக ஊடகங்களில் பரவியிருகும் விஷமானது, பிரபலங்கள் மட்டுமல்லாது ஒவ்வொரு நபரையும் பாதிக்கிறது. 

நம் பேரக்குழந்தைகள்கூட நம்மை நினைவில் வைத்திருப்பார்களா என்பது தெரியாததொன்றாக இருக்கும்போது, எதற்காக வெறுப்பைப் பரப்புகிறீர்கள்..? பிறருக்காகவும் சந்தோஷப்படுங்கள்!உங்கள் வாழ்க்கை மீது கவனத்தைச் செலுத்துங்கள். அதன்மூலம் இந்த உலகத்தை மேம்பட்டதொரு வசிப்பிடமாக மாற்ற பங்களியுங்கள் ” என்றார் அஜித் குமார்.

வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-

https://x.com/adminmedia1/status/1878993215048880187

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback