இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு! முழு விவரம்
இன்று சென்னையில் இருந்து மதுரைக்கு முன்பதிவில்லாத ரயில் தெற்கு ரயில்வே அறிவிப்பு! முழு விவரம்
பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறை முன்னிட்டு கூட்ட நெரிசலை சமாளிக்க சென்னை - மதுரை இடையே முன்பதிவில்லாத மெமு ரயில் சேவை இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
ஜனவரி 11 அன்று காலை 10.45 மணிக்கு, சென்னை எழும்பூர் - மதுரை இடையே முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06109) சென்னையில் இருந்து புறப்பட்டு இரவு 07.15 மணிக்கு மதுரை சென்றடையும்.
மறு மார்க்கத்தில் ஜனவரி 11 அன்று இரவு 8.30 மணிக்கு மதுரை - சென்னை முன்பதிவு இல்லாத மெமு ரயில் (06110) மதுரையில் இருந்து புறப்பட்டு திண்டுக்கல், கொடைக்கானல் ரோடு, திருச்சி, மணப்பாறை, ஸ்ரீரங்கம், விருத்தாச்சலம், அரியலூர், திண்டிவனம், மேல்மருவத்தூர், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக மறுநாள் அதிகாலை 4.40 மணிக்கு எழும்பூர் வந்து சேரும்.
Tags: தமிழக செய்திகள்
