Breaking News

தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

அட்மின் மீடியா
0

தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு

உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமனம் தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் சிறப்பு அலுவலர்களை நியமித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

அதன்படி  9,624 ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்கள், 27 மாவட்ட ஊராட்சிகளில் சிறப்பு அலுவலர்கள் நியமனம்

தமிழ்நாட்டில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததால் சிறப்பு அலுவலர்கள் இன்று 06.01.2025 முதல் 05.07.2025 வரை ஊரக பகுதிகளில் தனி அலுவலர்கள் நியமனம் - தமிழக அரசு உத்தரவு



தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். 9,624 கிராம ஊராட்சிகள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்ததால் சிறப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளன

உள்ளாட்சி தேர்தல்:-

தமிழகத்​தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டு​களில் உள்ளாட்​சித் தேர்தல் நடைபெற்​றது.

அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது .

இதனால், 9 மாவட்​டங்கள் தவிர்த்து மற்ற மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்ளாட்​சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்​பரில் தேர்தல் நடந்​தது. இதன் பதவிக்​காலம் ஐன.5-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாலும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் முடிவடையாததாலும், தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

சிறப்பு அதிகாரிகள்:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அடுத்தகட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே  பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அதன்படி  1 அரியலூர் 2 கோயம்புத்தூர் 3 கடலூர் 4 தருமபுரி 5 திண்டுக்கல் 6 ஈரோடு 7 கன்னியாகுமரி 8 கரூர் 9 கிருஷ்ணகிரி 10 மதுரை 11 மயிலாடுதுறை 12 நாகப்பட்டினம் 13 நாமக்கல் 14 பெரம்பலூர் 15 புதுக்கோட்டை 16 ராமநாதபுரம் 17 சேலம் 18 சிவகங்கை 19 தஞ்சாவூர் 20 நீலகிரி 21 தேனி 22 தூத்துக்குடி 23 திருச்சிராப்பள்ளி 24 திருப்பூர் 25 திருவள்ளூர் 26 திருவண்ணாமலை 27 திருவாரூர் 28 விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் உள்ள 

மாவட்ட ஊராட்சிகளுக்கு 

கூடுதல் இயக்குநர் / கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / இணை இயக்குநர் / திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை. 

ஊராட்சி ஒன்றியம் 

ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) / உதவி இயக்குநர் (தணிக்கை) 

கிராம ஊராட்சி 

வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) ஆகியோர் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback