Breaking News

புவி ஈர்ப்பு விசைஇல்லாத விண்வெளியில் விவசாயம் இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம் முழு விவரம்

அட்மின் மீடியா
0

புவி ஈர்ப்பு விசைஇல்லாத விண்வெளியில் விவசாயம் இஸ்ரோ வெளியிட்ட புகைப்படம் முழு விவரம்

விண்வெளியில் தாவர வளர்ச்சிக்கான CROPS திட்டம் வெற்றிகரமாக செயல்பட தொடங்கியுள்ளதாக இஸ்ரோ அமைப்பு அறிவித்துள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ விண்ணில் அனுப்பப்பட்ட பிஎஸ்எல்வி சி-60 ராக்கெட்டின் இறுதி பகுதியான பிஎஸ் 4 இயந்திரத்தில், போயம் அதாவது PSLV Orbital Experimental Module  கிராப்ஸ் ஆய்வுக் கருவியில் 8 காராமணி விதைகள், 4 நாட்களில் முளைக்க தொடங்கி உள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. 



மேலும் PSLV C-60 சாட்டிலைட்டின் துணைக்கோளான VSSC விண்கலத்தில், காராமணி விதைகள் முளைத்துள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ள இஸ்ரோ, "விரைவில் இலைகள் உருவாகும்" என்றும் தெரிவித்துள்ளது.

மேலும், "காராமணி விதைகள் முளைவிட்டன, முளைவிட்ட காராமணியில், விரைவில் இலைகள் வளருமென எதிர்பார்க்கிறோம். 7 நாள்களுக்குள் விதை முளைவிடுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 4 நாள்களில் முளைத்தன. வருங்காலத்தில் விண்வெளியில் வேளாண் சூழலை ஏற்படுத்துவதற்கான முன்கட்ட பரிசோதனை இதுவாகும்" என்று குறிப்பிட்டுள்ளது.

கிராப்ஸ் கருவியை பொறுத்தவரை, தானியங்கி செயல்பாடுகளுடன் கூடிய மூடப்பட்ட பாகங்களை கொண்டது. இதில் உள்ள சிறப்பு பேலோட்டுகளில் சிறிய அளவு மண்ணில் 8 காராமணி விதைகள் விதைக்கப்பட்டன.

Tags: தொழில்நுட்பம் வெளிநாட்டு செய்திகள்

Give Us Your Feedback