Breaking News

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு - எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி செய்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

அட்மின் மீடியா
0

பெண் பத்திரிக்கையாளர்கள் குறித்து அவதூறு - எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறை தண்டனை உறுதி செய்த மெட்ராஸ் உயர்நீதிமன்றம்

பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து - எஸ்.வி.சேகருக்கு தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

இந்த உத்தரவை மேல்முறையீடு செய்ய அனுமதி அளித்த நீதிபதி வேல்முருகன், சிறை தண்டனையை 3 மாதங்களுக்கு நிறுத்தி வைத்தும் உத்தரவு

கடந்த 2018ஆம் ஆண்டு பெண் பத்திரிகையாளர்கள் குறித்து தரக்குறைவாக விமர்சிக்கப்பட்டதை பாஜக-வை சேர்ந்த நடிகர் எஸ்.வி.சேகர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். 

இதைத் தொடர்ந்து அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் பாதுகாப்பு சங்கத்தின் சார்பில் செயலாளர் மிதார் மொய்தின் அளித்த புகாரின் அடிப்படையில், சென்னை மத்திய குற்றப்பிரிவினர், இந்திய தண்டனை சட்டம் மற்றும் பெண்கள் மீதான கொடுமைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்தனர்

இந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம், நடிகர் எஸ்.வி.சேகருக்கு ஒரு மாதம் சிறை தண்டனை மற்றும் 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. 

சிறப்பு நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் நடிகர் எஸ் வி. சேகர்  மேல்முறையீடு செய்திருந்தார். 

இந்த நிலையில் வழக்கில் இறுதி தீர்ப்பு வழங்கிய நீதிபதி பி.வேல்முருகன், நடிகர் எஸ்.வி். சேகருக்கு வழங்கிய ஒரு மாத சிறை தண்டனையை உறுதி செய்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ளார் . 

இதையடுத்து எஸ்.வி. தரப்பு வழக்கறிஞர் உச்சநீதிமன்றமுறையீடு செய்ய வேண்டும் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். கோரிக்கை பரிசீலித்த நீதிபதி மூன்று மாதம் தண்டனை நிறுத்தி வைத்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Tags: அரசியல் செய்திகள்

Give Us Your Feedback