பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குண்டு காயத்துடன் இறந்து கிடந்ததால் பரப்பரப்பு நடந்தது என்ன முழு விவரம்
பஞ்சாபில் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குண்டு காயத்துடன் இறந்து கிடந்ததால் பரப்பரப்பு நடந்தது என்ன முழு விவரம்
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தின் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் கோகி. இவர் நேற்று (ஜன.10) வெள்ளிக்கிழமை இரவு மர்மான முறையில் தனது வீட்டில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயமடைந்து கிடந்தார்.
குர்பிரீத் கோகி லூதியானா தொகுதியில் இரண்டு முறை காங்கிரஸ் எம்.எல்.ஏவாக பதவி வகித்த நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட்டு, காங்கரஸ் மாநில தலைவர் பாரத் பூஷண் ஆஷுவை தோற்கடித்து எம்எல்ஏவாக வெற்றி பெற்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நள்ளிரவில் எம்.எல்.ஏ குர்பீரித் கோகாய் அறையில் இருந்து திடீரென துப்பக்கி குண்டு சத்தம் கேட்டதால் அவரது அறைக்கு சென்று பார்த்ததாகவும் அப்போது ரத்த வெள்ளத்தில் அவர் படுக்கையில் கிடந்ததாகவும் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.அவரது உடல் பிரேத பரிசோதனை செய்த பிறகு காரணம் தெரிய வரும்
Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள்
