மாதா மாதம் மின் கணக்கீடு எப்போது? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
மாதா மாதம் மின் கணக்கீடு எப்போது? - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
![]() |
| Senthil Balaji News in Tamil |
தமிழ்நாட்டில் மாதம் ஒருமுறை மின்சார கட்டணம் கணக்கீடு என்ற திமுகவின் வாக்குறுதி என்னவானது என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு அமைச்சர் செந்தில் பாலாஜி,
ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம் நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம் அளித்தார்.
வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களின் மின்சாரப் பயன்பாட்டைத் துல்லியமாகக் கணக்கிடும் வகையிலும், மின்சார வாரியங்களின் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் குறைக்கும் வகையிலும் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஸ்மார்ட் மீட்டர்களைப் பொருத்துவதை கட்டாயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.
தமிழ்நாட்டில் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட்டதும் மாதாந்திர மின் கட்டணம், நடைமுறைக்கு வரும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறினார்.
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்
