பரந்தூர் கிராம மக்களை சந்திக்க அனுமதி கேட்டு - எஸ்பி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு
அட்மின் மீடியா
0
பரந்தூர் கிராம மக்களை சந்திக்க அனுமதி கேட்டு - எஸ்பி அலுவலகத்தில் தவெக சார்பில் மனு
புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை சந்திக்க அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கடிதம் விஜய் வருகைக்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் தேதிகளில் அனுமதி தரும்படி தவெக பொருளாளர் வெங்கடரமணன் தலைமையில் இன்று மனு அளித்துள்ளனர்
தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய் அரசியலுக்கு வந்த பிறகு முதன் முறையாக மக்கள் போராட்டத்தில் கலந்து கொள்கிறார் இதற்காக அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சர்வதேச விமான நிலையம் மீனம்பாக்கம் விரிவாக்கம் செய்ய உண்டான இடவசதிகள் இல்லாத காரணத்தினால் புதிய விமான நிலையம் அமைக்க காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூரில் புதிய சர்வதேச விமான நிலையம் அமைக்கப்படவுள்ளதாக மத்திய மாநில அரசுகள் அறிவித்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்திற்கு உட்பட்ட பரந்தூர் பகுதியில் சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
பரந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பல்வேறு கிராமங்களில், 5746 ஏக்கர் பரப்பளவில் விமான நிலையம் அமைய உள்ளது. இதில் 3700 ஏக்கர் பட்டா நிலம் என்பதால், நிலம் கையகப்படுத்தும் பணி வருவாய்த்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் அங்குள்ள கிராமங்களில் நெல்வாய், நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம் மற்றும் மகாதேவி மங்கலம் ஆகிய கிராமங்களில் இருந்து சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் கையகப்படுத்தப்பட உள்ளன.
இங்கு விமான நிலையம் அமைக்க கூடாது என கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மக்களின் போராட்டத்தை பொருட்படுத்தாமல் தொடர்ந்து, திட்டத்தை செயல்படுத்தும் பணியில் அரசு சார்பில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேசமயம் கிராம மக்கள், 900 நாட்களுக்கு மேலாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதேசமயம் புதிய விமான நிலைய திட்டத்தை எதிர்த்துப் போராடும் பரந்தூர் கிராம மக்களை சந்திக்க அனுமதி கேட்டு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் கடிதம் விஜய் வருகைக்கு ஜன.19 அல்லது ஜன.20ஆம் தேதிகளில் அனுமதி தரும்படி தவெக பொருளாளர் வெங்கடரமணன் தலைமையில் இன்று மனு அளித்துள்ளனர்
Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

