காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
காட்டுப்பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி - தமிழக அரசு அறிவிப்பு
சட்டப்பேரவையில் த.வா.க. எம்.எல்.ஏ. வேல்முருகன் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசிய போது
விளைநிலங்களில் கடும் சேதத்தை ஏற்படுத்தும் காட்டுப் பன்றிகளை வேட்டையாட அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
மதிமுக எம்.எல்.ஏ. ரகுராமன்; காட்டுப்பன்றிகளை கொல்ல உள்ளாட்சி அமைப்புகளுக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்று கூறினார்.
அமைச்சர் பொன்முடி;
பயிர்களை சேதப்படுத்தும் காட்டு பன்றிகளை சுட்டுக்கொல்ல வனத்துறைக்கு அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. காப்புக்காடுகளில் இருந்து 1 முதல் 3 கி.மீ. தொலைவுக்குள் காட்டுப்பன்றி வந்தால் சுட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. விவசாயிகள் பன்றிகளை துப்பாக்கியால் சுடுவது குறித்து வருங்காலங்களில் பரிசீலிக்கப்படும்.வனவிலங்குகள் எவை எவை என அறிவிப்பது மத்திய அரசு தான். வன விலங்கு பட்டியலில் காட்டுப் பன்றி உள்ளது. அதை நீக்குவது எளிதல்ல. மத்திய அரசின் வனவிலங்கு அறிவிப்பு பட்டியலில் இருந்து காட்டு பன்றியை விலக்குவது சாதாரணமானது அல்ல. இவ்வாறு அவர் பேசினார்.
Tags: தமிழக செய்திகள்
