Breaking News

ஆன்லைன் சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதில் வாட்ஸ் ஆப் முதலிடம் - உள்துறை அமைச்சகம்

அட்மின் மீடியா
0

WhatsApp is most used platform for cyber crimes  ஆன்லைன் சைபர் குற்றங்கள் அதிகம் நடப்பதில் வாட்ஸ் ஆப் முதலிடம்...உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வருடாந்திர அறிக்கையில் தகவல்



இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

2024ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் வாட்ஸ்அப் மூலம் ஆன்லைன் மோசடி தொடர்பாக 43,797 புகார்களும், டெலிகிராமுக்கு எதிராக 22,680 புகார்களும், இன்ஸ்டாகிராம் மீது 19,800 புகார்களும் பதிவாகியுள்ளன. 

சைபர் குற்றங்களில் அதிகம் ஈடுபடுபவர்கள் தங்கள் குற்றங்களுக்கு கூகுள் சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சைபர் குற்றங்கள் தொடர்பாக ஏதாவது அழைப்பு வந்தால், யாரும் பயம் கொள்ள தேவையில்லை. இது தொடர்பாக, 1930 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கவும்.

இணையவழி குற்றங்களில் ஈடுபடுவோருக்கு ஒரு லட்சம் அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும், தொடர் குற்றங்களுக்கு இரண்டு லட்சம் அபராதம் மற்றும் பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback