ட்ரம்ப் ஹோட்டலுக்கு வெளியே திடீரென வெடித்துச் சிதறிய டெஸ்லா கார் ஒருவர் பலி - வைரல் வீடியோ
ட்ரம்ப் ஹோட்டலுக்கு வெளியே திடீரென வெடித்துச் சிதறிய டெஸ்லா கார் வைரல் வீடியோ
டொனால்ட் ட்ரம்புக்கு சொந்தமான ஹோட்டலின் நுழைவாயிலில் டெஸ்லாவின் Cybertruck கார் வெடித்துச் சிதறியதில் ஒருவர் உயிரிழப்பு 7 பேர் காயம்
இதற்கும் வாகனத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என டெஸ்லா CEO எலான் மஸ்க் திட்டவட்டம்
காருக்குள் இருந்த பெரிய பட்டாசுகள் அல்லது வெடிகுண்டுகளால் வெடிக்க வைத்து தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என தகவல்
நெவாடா மாகாணத்தில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு டிரம்புக்கு சொந்தமான ஹோட்டல் உள்ளது. இந்த ஹோட்டலுக்கு வெளியே டெஸ்லா சைபர் டிரக் எனப்படும் கார் நிறுத்தப்பட்டிருந்தது. எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனத்தின் சைபர் டிரக் வெடித்துச் சிதறியுள்ளது.
புத்தாண்டு அன்று நடைபெற்ற இந்தச் சம்பவத்தில் ஒருவர் பலியான நிலையில் 7 பேர் காயமடைந்துள்ளனர்.
இது பயங்கரவாத தாக்குதலாக இருக்கலாம் என டெஸ்லா நிறுவனத்தின் சி.இ.ஓ., எலான் மஸ்க் சந்தேகப்படுகிறார். இது குறித்து டெஸ்லாவின் உயர் அதிகாரிகள் குழு தீவிர விசாரணை நடந்து வருகிறது.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1874751153688502603
Tags: வெளிநாட்டு செய்திகள் வைரல் வீடியோ
