Breaking News

டெஸ்ட் ட்ரைவ் பைக்கை புது பைக் என ஏமாற்றிய பைக் ஷோரூம் முழு விபரம்

அட்மின் மீடியா
0

சென்னை பம்மலில் டெஸ்ட் ட்ரைவ் பைக்கை புது பைக் என ஏமாற்றிய பைக் ஷோரூம் முழு விபரம்



பல்லாவரம் அடுத்த பம்மல் பஜாரில் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனம் உள்ளது இங்கு, கடந்த மாதம் சென்னை, இராயபுரத்தை சேர்ந்த யாதேஷ்  என்பவர் மோட்டார் சைக்கிள் ஒன்றை வாங்கியுள்ளார்

ஆனால் வாங்கிய நாள் முதல் அடிக்கடி வண்டி ரிப்பேர்  ஆகியுள்ளது இது குறித்து ஷோரூம் நிர்வாகத்திடம் கேட்டபோது, அவர்கள் முறையாக பதில் அளிக்கவில்லை

தற்செயலாக வண்டி வாங்கும் முன் டெமோ ஓட்டிய வாகனத்தின் புகைப்படங்களை பார்த்த பொழுது இவருக்கு விற்பனை செய்யப்பட்ட வண்டி என கண்டு அதிர்ச்சி அடைந்தார். 

இது குறித்து கடந்த மாதம் 12-ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் விசாரணையில்  டெஸ்ட் ட்ரைவ் பைக் என்பதை ஒப்புக்கொண்ட அவர்கள் வாங்கிய பணத்தை திருப்பித் தருவதாகவும் உறுதியளித்ததாக கூறப்படுகின்றது

இந் நிலையில் ஷோரூம் நிறுவனம்  கொடுக்க வேண்டிய பணத்தை திருப்பிக் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர் இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட யாதேஷ் நண்பர்கள் இருசக்கர வாகனம் விற்பனை செய்யும் நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். நிறுவனத்தின் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததன் பேரில் கலைந்து சென்றனர். 

இது குறித்து யாதேஷ் மீண்டும் சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சங்கர் நகர் குற்றப் பிரிவு போலீசார், அந்த ஷோரூமின் உரிமையாளர் விவேக், மேலாளர் செல்வகுமார், இன்சார்ஜ் தேவா, விற்பனையாளர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback