Breaking News

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் அசாதுதீன் ஒவைசி மனு தாக்கல் முழு விபரம்

அட்மின் மீடியா
0

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்த உச்சநீதிமன்றத்தில் அசாதுதீன் ஒவைசி மனு தாக்கல் முழு விபரம்

வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை அமல்படுத்தக் கோரி AIMIM கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி தாக்கல் செய்த மனுவை பரிசீலிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்!  

சுதந்திரம் பெற்ற நாளில் இருந்து எந்தெந்த மத தலங்கள், எந்த நிலையில் இருக்கிறதோ, அதே நிலையில் தான் நீடிக்க வேண்டும் என வழிபாட்டுத் தலங்கள் சட்டம்  1991 பிரிவு 4(2) கூறுகிறது  

இதற்கு எதிராக பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை முறையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய அசாதுதீன் ஒவைசி மனு தாக்கல்

முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இச்சட்டப்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

நாட்டில் பல இடங்களில் மசூதிகள் உள்ள இடங்களில் கோயில்கள் இருந்ததாக பல இடங்களில் வழக்குகள் தொடரப்பட்டு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

அம்மனுக்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் மத வழிபாட்டுத்தலங்களின் உரிமை கோருவது தொடர்பான வழக்குகளை ஏற்கக்கூடாது என்றும் ஏற்கனவே உள்ள வழக்குகளில் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்றும் தற்காலிக தடை விதித்திருந்தனர். 

இந்நிலையில் மத வழிபாட்டுத்தல சட்டத்தை திறம்பட செயல்படுத்த ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் ஒவைசி வழக்குத்தொடுத்துள்ளார்.

வழிபாட்டுத்தலங்கள் தொடர்பான வழக்குகள் வரும் மாதம் 17ஆம் தேதி மீண்டும் விசாரிக்கப்பட உள்ள நிலையில் அசாதுதீன் ஒவைசியின் மனுவும் விசாரிக்கப்படும் என தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமர்வு தெரிவித்துள்ளது.

Tags: அரசியல் செய்திகள் இந்திய செய்திகள் மார்க்க செய்தி

Give Us Your Feedback