விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பானை சின்னம் ஒதுக்கீடு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக அங்கீகாரம் பானை சின்னம் ஒதுக்கீடு இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவிப்பு
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாநிலக் கட்சியாக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னமும் ஒதுக்கீடு செய்தது தேர்தல் ஆணையம்
கடந்த மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதை அடுத்து தேர்தல் ஆணையம் இந்த அங்கீகாரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு அளித்துள்ளது.
மேலும் பானை சின்னம் கோரி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்திருந்தது.
மாநிலக்கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து பானை சின்னத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கியுள்ளதாகவும் தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை சுட்டிக்காட்டி கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Tags: அரசியல் செய்திகள்
