ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட மது பிரியர் வீடியோ
ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட மது பிரியர் வீடியோ
ஆந்திராவில் மது அருந்த பணம் தராத தாய்க்கு பயத்தைக் காட்ட மின் கம்பத்தில் ஏறி படுத்துக்கொண்ட குடிகார இளைஞர்.மின் கம்பத்தில் இளைஞர் ஏறுவதைப் பார்த்த மக்கள், உடனடியாக மின்சார சப்ளையை நிறுத்தி அவரின் உயிரைக் காப்பாற்றினர்.
ஆந்திரப் பிரதேச மாநிலம் மன்யம் மாவட்டம், பாலகொண்டா மண்டலம், எம்.சிங்கிபுரத்தில் மதுபோதையில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி மின்சாரம் பாயும் கம்பிகளின் மீது படுத்துக்கொண்டார்.
இவர் மின் கம்பத்தில் ஏறுவதை பார்த்த கிராமவாசிகள் டிரான்ஸ்பார்மரை நிறுத்தி மின்சாரத்தை துண்டித்துள்ளனர். அங்கு சிறிது நேரம் கூத்து செய்தார். அனைவரும் அவரை வலுக்கட்டாயமாக கீழே இறக்கினர்
இந்நிலையில், தற்போது கிராமவாசிகள் இறங்கி வருமாறு அந்த இளைஞரிடம் கெஞ்சும் விடியோ இணையத்தில் வைரலாகின்றது
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த இளைஞரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
வீடியோ பார்க்க இங்கு கிளிக் செய்யவும்:-
https://x.com/adminmedia1/status/1874453110485311750
Tags: இந்திய செய்திகள் வைரல் வீடியோ
