கனடாவின் புதிய பிரதமருக்கான போட்டியில் தமிழ் வம்சாவழி அனிதா ஆனந்த் முழு விவரம் Anita Anand
கனடாவின் புதிய பிரதமர் ரேஸில் தமிழர் அனிதா ஆனந்த் முழு விவரம் Anita Anand
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, லிபரல் கட்சியின் தலைவர் பதவியையும் பிரதமர் பதவியில் இருந்து இன்று ராஜினாமா செய்தார்.
அவரது கட்சிக்கு புதிய ஜனநாயக கட்சி அளித்து வந்த ஆதரவை விலக்கிய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
புதிய பிரதமர் தேர்வு செய்யப்படும் வரை தானே பதவியில் நீடிப்பதாகவும் அறிவித்தார்.
இந்நிலையில் அடுத்து கனடாவின் புதிய பிரதமர் ஆக யார் பதவியேற்பார் என்ற கேள்வி எழுந்தது.
இதில் அந்நாட்டு போக்குவரத்துத் துறை அமைச்சர் அனிதா ஆனந்த் உள்ளிட்டோரின் பெயர் பரிசீலனையில் உள்ளது
லிபரல் கட்சித் தலைவர் பதவிக்கான போட்டியில் அனிதா ஆனந்த் உள்ளார். மேலும் கனடாவின் முன்னாள் துணைப் பிரதமர் கிறிஸ்டியா ஃப்ரீலேண்ட் மற்றும் . டொராண்டோவின் நாடாளுமன்ற உறுப்பினர் கிறிஸ்டியா வும் உள்ளார்கள்
தமிழகத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாபைச் சேர்ந்த தாாருக்கு பிறந்தவர் அனிதா ஆனந்த்(57). 2019 ல் ஆக்வில்லா தொகுதியில் வெற்றி பெற்றதும், ட்ரூடோ அமைச்சரவையில் இடம்பெற்றார். தற்போது போக்குவரத்துத்துறை அமைச்சராக உள்ளார்.
Tags: அரசியல் செய்திகள் வெளிநாட்டு செய்திகள்
