Breaking News

மகாராஷ்டிராவில் பரபரப்பு 7 நாளில் வழுக்கை தலையான 3 கிராம மக்கள்- தலையை தொட்டாலே முடி கொட்டுவதால், வழுக்கை வைரஸ் பரவுவதாக மக்கள் அச்சம் maharastra hair loss

அட்மின் மீடியா
0

மகாராஷ்டிராவில் பரபரப்பு 7 நாளில் வழுக்கை தலையான 3 கிராம மக்கள்- தலையை தொட்டாலே முடி கொட்டுவதால், வழுக்கை வைரஸ் பரவுவதாக மக்கள் அச்சம் maharastra hair loss

மகாராஷ்டிரா மாநிலம் புல்தானா மாவட்டத்தில் ஷேகான் தாலுகா உள்ளது. இந்த தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் போர்கான், கல்வாட் மற்றும் ஹிங்னா என்ற கிராமங்கள் உள்ளன. 



போர்காவ், கல்வாட், ஹிங்னா கிராமங்களில் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை உள்ள அனைவருக்கும்  மொத்தமாக முடி கொட்டுவதால் நூற்றுக்கும் மேற்பட்டோர் தலை வழுக்கை ஆகியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கிராமங்களில் கடந்த ஒரு வாரமாக ஒரு அரிய வகை மர்ம நோய் பரவி வருகிறது. அதாவது திடீரென முடி அதிக அளவில் கொட்டி வழுக்கை ஏற்படுகிறது. இந்த பாதிப்பு ஆண்கள், பெண்கள், முதியவர் மற்றும் சிறியவர் என அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

முதலில் உச்சந்தலையில் சிறிது அரிப்பு ஏற்படுகிறது. பின்னர் முடி சொரசொரப்பாக மாறுகிறது. இதைத்தொடர்ந்து 72 மணி நேரத்தில் அவர்கள் முடி வழுக்கையாகும் வரை உதிர்கிறது. தலைமுடியில் வைத்தால் கூட கொத்து கொத்தாக உதிர்வதாக கூறியுள்ளனர். 

இந்த பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவர்களிடம் சிகிச்சை பெறுகிறார்கள் .மேலும் கடந்த 10 நாட்களாக இந்த மர்ம நோய் பரவி வரும் நிலையில் இந்த பாதிப்புக்கு என்ன காரணம் என்று தெரியாமல் மக்கள் பீதியில் இருக்கிறார்கள்.பள்ளி செல்லும் குழந்தைகள் தலை வழுக்கையானதால் முக்காடு போட்டுச் செல்லும் காட்சிகள் பெரும் பீதியை ஏற்படுத்தி இருக்கிறது. 

கிராமங்களில் தலையை 3 நாட்களில் வழுக்கையாக்கும் புதிய மர்ம நோய் பரவி வருவதாகவும், அது வழுக்கை வைரஸ் பாதிப்பு எனவும் மக்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்

இந்த பிரச்சனை குறித்து மாவட்ட சுகாதார அதிகாரிகள் உடனடியாக 3 கிராமங்களிலும் முகாம் இட்டு பரிசோதனை நடத்தினர

அதில் தலையில் உள்ள முடியைத் தொட்டாலே கையோடு வரும். சுமார் 50 பேர் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவர்கள் அஞ்சுகின்றனர்.

மேலும் மூன்று கிராமங்களுக்கும் வழங்கப்படும் தண்ணீர் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளது. இது தவிர, முடி மற்றும் தோல் மாதிரிகளும் சோதனைக்காக எடுக்கப்பட்டுள்ளன. சோதனை முடிவுகள் வந்ததும், முடி உதிர்தலுக்கான காரணங்கள் தெரியவரும். "எனவே, கிராம மக்கள் தங்கள் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும்," என்று அவர்கள் கூறினர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback