Breaking News

500 சதுர அடிக்கு மேல் மற்றும் எட்டு குடியிருப்புகள் மேல் இருக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமல் திட்டங்களை விளம்பரம், முன்பதிவு மற்றும் விற்பனை செய்ய கூடாது - தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரிக்கை

அட்மின் மீடியா
0

500 சதுர அடிக்கு மேல் மற்றும் எட்டு குடியிருப்புகள் மேல் இருக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமல் திட்டங்களை விளம்பரம், முன்பதிவு மற்றும் விற்பனை செய்ய கூடாது - தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரிக்கை



வீட்டுமனை நிலப்பரப்பு 500 சதுர அடிக்கு மேல் மற்றும் எட்டு குடியிருப்புகள் மேல் இருக்கும் பட்சத்தில் பதிவு செய்யாமல் திட்டங்களை விளம்பரம், முன்பதிவு மற்றும் விற்பனை செய்ய கூடாது. அதை மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!”- தமிழ்நாடு கட்டட மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரிக்கை!

இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்:-

தமிழ்நாடு சுட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் எச்சரிக்கை அறிவிப்பு கட்டட மற்றும் மனை விற்பனை (முறைப்படுத்துதல் மற்றும் மேம்படுத்துதல்) சட்டம், 2016, 0105.2017 அன்று முதல் செயல்பாட்டில் உள்ளது. 

சட்டப்பிரிவு 3 ன் படி, விற்பனை செய்யப்படவுள்ள (தீர்வை விலக்கப்பட்ட மற்றும் குத்தகை உடைமையுள்ள) வீட்டுமனையின் நிலப்பரப்பளவு 500 சதுரமீட்டருக்கு மேல், அனைத்து வணிக மற்றும் குடியிருப்பு கட்டிடங்களின் பரப்பளவு 500 சதுரமீட்டருக்கு மேலும் மற்றும் 8 குடியிருப்புகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில், தமிழ்நாடு கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் பதிவு செய்வது கட்டாயமாகும். 

திட்ட மேம்பாட்டாளர்கள் தமிழ்நாடு கட்டட மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமத்தில் மேற்கூறிய வகைகளில் பதிவு செய்யாமல் திட்டங்களை விளம்பரம். முன்பதிவு செய்தல் மற்றும் விற்பனை செய்தல் கூடாது. திட்ட மேம்பாட்டாளர் https://rera.tn.gov.in என்ற இக்குழுமத்தின் இணையதளத்தின் மூலம் |திட்டப்பதிவிற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கவேண்டும். 

திட்ட மேம்பாட்டாளர் திட்ட குழுமம் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களின் கட்டாயத் தேவைகளை பூர்த்தி செய்தும் மற்றும் | நிபந்தனைகளுக்கு இணங்கியும் திட்டத்திற்கான விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும். சட்டப்பிரிவு 3ன் வழிமுறைகளை மீறுதல், இக்குழுமத்தில் பதிவு செய்யாமல் விளம்பரம் செய்தல் மற்றும் வீட்டுமனை அல்லது குடியிருப்புகளை விற்பனை செய்தல் போன்ற குற்றங்களுக்கு சட்டப்பிரிவு 59ன் படி தண்டனைக்கு ஆளாக நேரிடும். சட்டப்பிரிவு 59 (1)ன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளளது:

"எந்தவொரு திட்ட மேம்பாட்டாளரும் பிரிவு 3ன் விதிகளை மீறினால், கட்டடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறைக் குழுமத்தால் நிர்ணமிக்கப்பட்டபடி திட்ட மதிப்பீட்டில் பத்து சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்." அபராத தொகை விவரங்களை இக்குழுமத்தின் 13.11.2024 நாளிட்ட கற்றறிக்கையை https://rera.tn.gov.in/homePageFiles/TNRERA-Circular-3867-2024.pdf )  வெளியிடப்பட்டுள்ளதை பார்வையிடலாம். 

திட்ட மேம்பாட்டாளர் இக்குழுமத்தால் சட்டப் பிரிவு 59 (1)ன் கீழ் அளிக்கப்பட்ட ஆணைகள், முடிவுகள் அல்லது கட்டளைகளை கடைபிடிக்க தவறினால், சட்டப்பிரிவு 59 (2)ன் படி தண்டனை விதிக்கப்படும். சட்டப்பிரிவு 59 (2)ன் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. "எந்தவொரு திட்ட மேம்பாட்டாளரும் உட்பிரிவு டூன் கீழ் வழங்கப்பட்ட உத்தரவுகள், முடிவுகள் அல்லது வழிகாட்டுதல்களுக்கு இணங்கவில்லை அல்லது பிரிவு 3ன் விதிகளை தொடர்ந்து மீறினால், அவருக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது திட்ட மதிப்பீட்டில் மேலும் பத்து சதவீதம் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்." 

அனைத்து பதிவு செய்யப்பட்ட திட்டங்களும் இக்குழுமத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் வீட்டு மனையோ அல்லது குடியிருப்போ வாங்குவதற்கு முன் குறிப்பிடப்பட்ட திட்டம் (வீட்டுமனை அல்லது கட்டிடம்) இக்குழுமத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதா என இணையதளத்தில் சரிபார்க்க அறிவுறுத்தப்படுகிறது. 

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback