Breaking News

கேரளாவில் அதிர்ச்சி சிறுமியை 5 ஆண்டுகளில் 62 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் 5 பேர் கைது முழு விவரம்

அட்மின் மீடியா
0

கேரளாவில் அதிர்ச்சி சிறுமியை 5 ஆண்டுகளில் 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் 5  பேர் கைது முழு விவரம்


கேரளா மாநிலம் பத்தனம் திட்டாவில் 5 ஆண்டுகளாக சிறுமி ஒருவரை 64 பேர் பாலியல் வன்கொடுமை செய்ததாக போலீசில் புகார்சிறுமியின் புகாரை அடுத்து 5 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் 10-க்கும் மேற்பட்டவர்களை பிடித்து போலீசார் விசாரணை

கேரளாவின் பத்தனம்திட்டாவில் உள்ள 18 வயது சிறுமி, 64 பேர் ஐந்து ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

அந்த சிறுமி, 13 வயதில் இருந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாக தனது புகாரில் தெரிவித்துள்ளார்.பாலியல் மாணவி அளித்த புகாரின் பேரில், எலவும்திட்டா போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்தவர்களில் பயிற்சியாளர்கள், விளையாட்டு வீரர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் அயலவர்கள் உள்ளனர்.இதுவரை பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலித் சிறுமி முதன்முதலில் 13 வயதில் நெருங்கிய நண்பரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டார். அப்போது தந்தையின் நண்பர்களும், ஆண் நண்பரின் நண்பர்களும் சேர்ந்து அவரை சித்ரவதை செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் ரன்னி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 

சமீபத்தில் பள்ளியில் நடந்த  பாலியல் வன்கொடுமைக்கு எதிராக வகுப்பில் வழங்கப்பட்ட ஆலோசனையின் போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமையை பகிர்ந்துள்ளார். அதன்பின்பு இது குறித்து புகார் அளிக்கப்பட்டு இந்த சம்பவம் வெளிச்சத்திற்க்கு வந்துள்ளது

பத்தனம்திட்டா குழந்தைகள் நலக் குழுவின் தலைவர் ராஜீவ் கூறுகையில், பள்ளியில் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை குறித்து கூறினார்

.இதையடுத்து, குழந்தைகள் நலக் குழு சார்பில் போலீசில் புகார் வழங்கப்பட்டது. விளையாட்டு வீராங்கனையான சிறுமி, பத்தனம் திட்டாவில் விளையாட்டு முகாம்கள் உட்பட பல இடங்களில் பயிற்சியாளர்கள், வகுப்பு தோழர்கள் மற்றும் உள்ளூர்வாசிகளால் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.

தன்னை துஷ்பிரயோகம் செய்த சுமார் 40 பேரின் எண்களை தனது தந்தையின் மொபைல் போனில் சிறுமி பதிந்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி உளவியல் நிபுணரிடம் அழைத்துச்செல்லப்பட்டார். மற்ற குற்றாவளிகளை கண்டுபிடிக்கும் பணியில் போலீஸ் தீவிரமாகியுள்ளது

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback