Breaking News

ஒரு வருடத்தில் ரூ 40 லட்சம் வருமானம்! பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் GST notice to a pani puri

அட்மின் மீடியா
0

ஒரு வருடத்தில் ரூ 40 லட்சம் வருமானம்!பானிபூரி வியாபாரிக்கு ஜிஎஸ்டி நோட்டீஸ் GST notice to a pani puri



தமிழ்நாட்டில் வட மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் பானி பூரி கடை வைத்துள்ளார். இந்நிலையில் அவருக்கு தமிழ்நாடு ஜி.எஸ்.டி. சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக ஒரு தகவல் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது

பானி பூரி விற்பனையின் மூலம் அவரது ஆண்டு வருமானம் ₹40 லட்சத்தை தாண்டுவதால், அதற்கான வர்த்தகங்களுக்கு ஜிஎஸ்டி வரி பதிவை கட்டாயமாக்கியுள்ளது! ஆன்லைன் பேமெண்ட் (RazorPay, PhonePe) மூலம் விற்பனையாளரின் பரிவர்த்தனைகளை கணக்கில் கொண்டு ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது

2023-24 ஆம் ஆண்டில் மட்டும் அவரது வங்கிக் கணக்கில் ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் ரூ.40 லட்சம் வரவு வைக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 17, 2024 தேதியிட்ட நோட்டீசில், தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி பிரிவு 70ன் கீழ் தொழிலாளர் நேரில் ஆஜராகி உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 

ரேசர் பே மற்றும் போன் பே மூலம் இந்தப் பணப் பரிவர்த்தனைகள் நடைபெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது

மேலும், அந்தத் தொகைக்கு அதிகமான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்குப் பிறகும் ஜிஎஸ்டியில் பதிவு செய்யாதது குற்றம் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இருப்பினும், அந்த அறிவிப்பு எந்தளவுக்கு உண்மையானது அல்லது எந்த மாவட்டத்தில் பானி பூரி கடைக்காரர் தனது கடையை வைத்திருக்கிறார் என்பது குறித்த அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை

Tags: தமிழக செய்திகள்

Give Us Your Feedback