பீகாரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி பலி முழு விவரம்
பீகாரில் ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி பலி முழு விவரம்
பிகாரில் தண்டாவளத்தில் அமர்ந்து பப்ஜி விளையாடிய 3 இளைஞர்கள் ரயில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழப்பு; ஃபுர்கான் ஆலம், மன்ஷா தோலா, சமீர் ஆலம் ஆகிய மூவரும் காதில் ஹெட்போன் மாட்டிக் கொண்டு பப்ஜி விளையாடியதால், ரயில் வருவதை அறியாது பலியாகியுள்ளனர்
பீகார் மாநிலம், மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் முஃபாசில் காவல்நிலையத்திற்குட்பட்ட நர்கதியாகஞ்ச்-முசாபர்பூர் ரயில் தண்டவாளத்தில் மன்சா தோலாவில் உள்ள ராயல் பள்ளி அருகே ரயில் தண்டவாளத்தில் அமர்ந்து பப்ஜி கேம் விளையாடி கொண்டிருந்தபோது ரயில் வருவதை கவனிக்காமால் இருந்ததை அடுத்து ரயில் மோதி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கேம் விளையாடிக் கொண்டிருந்த அவர்கள் காதில் இயர்போன் அணிந்திருந்ததால், ரயில் வருவதை கவனிக்கத் தவறியதால் விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
பலியான அனைவரும் ஃபுர்கான் ஆலம், சமீர் ஆலம் மற்றும் ஹபிபுல்லா அன்சாரி என அடையாளம் காணப்பட்டனர்.ரயில்வே காவல்துறை சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags: இந்திய செய்திகள்
