Breaking News

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு - தமிழக அரசின் முடிவு என்ன? முழு விவரம்

அட்மின் மீடியா
0

28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு முழு விவரம்

தமிழ்நாட்டில் 2019 ஆம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது.

உள்ளாட்சி தேர்தல்:-

தமிழகத்​தில் ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு​களுக்கு கடந்த 2019 மற்றும் 2021-ம் ஆண்டு​களில் உள்ளாட்​சித் தேர்தல் நடைபெற்​றது.

அதிமுக ஆட்சியில் புதிதாக 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதால், நடைபெற்ற வார்டு மறு சீரமைப்புப் பணி காரணமாக, 9 மாவட்டங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட்டது .

இதனால், 9 மாவட்​டங்கள் தவிர்த்து மற்ற மாவட்​டங்​களில் உள்ள ஊரக உள்ளாட்​சிகளுக்கு கடந்த 2019-ம் ஆண்டு டிசம்​பரில் தேர்தல் நடந்​தது. இதன் பதவிக்​காலம் ஐன.5-ம் தேதி​யுடன் நிறைவடைகிறது.

மேலும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாலும், நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான பதவிக்காலம் முடிவடையாததாலும், தற்போதைக்கு உள்ளாட்சித் தேர்தல் நடத்த வாய்ப்பில்லை என கூறப்படுகிறது.

சிறப்பு அதிகாரிகள்:-

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்ட வெற்றி பெற்ற பிரதிநிதிகளின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவு பெறுகிறது. அடுத்தகட்டமாக தேர்தல் நடத்தப்பட வேண்டிய சூழலில் எந்தவித அறிவிப்பும் இதுவரை வெளியாகவில்லை. எனவே  பதவிக் காலம் முடிய​வுள்ள 28 மாவட்​டங்​களில் உள்ள ஊராட்​சிகளுக்கு சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர்

2025ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பமாகிறது. இதில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றுகிறார். இந்த கூட்டத்தொடரில் ஊரக உள்ளாட்சிகளுக்கு சிறப்பு அதிகாரிகளை நியமிப்பது தொடர்பான மசோதா நிறைவேற்றப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags: அரசியல் செய்திகள் தமிழக செய்திகள்

Give Us Your Feedback