Breaking News

மும்பையில் நண்பருடன் அரட்டை அடித்து 2 வயது குழந்தை மீது தடுக்கி விழுந்த நபர் - துடிதுடிக்க குழந்தை உயிரிழந்த சோகம்

அட்மின் மீடியா
0

நண்பருடன் அரட்டை அடித்து 2 வயது குழந்தை மீது தடுக்கி விழுந்த நபர் துடிதுடிக்க குழந்தை உயிரிழந்த சோகம் 

மும்பையில் கல்லூரி மாணவர் ஒருவர் இரண்டு வயது குழந்தை மீது தடுக்கி விழுந்ததில் அக்குழந்தை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மும்பையில் கல்லூரி படிப்பை படித்துக் கொண்டு வருபவர் ஹர்ஷத் கௌரவ். 

இவர் கடந்த ஜனவரி 2ம் தேதி அம்ரித்லால்வாடி பகுதியில் உள்ள ஒரு கடை அருகே தனது நண்பர்களுடன் அரட்டை அடித்து பேசிக் கொண்டு உள்ளார். அவரது நண்பர் ஹர்ஷத் மாறி மாறி தள்ளிவிட்டு விளையாடிகொண்டு இருந்தார்கள்

அப்போது அந்த கடை அருகே விதி அக்ரஹாரி என்ற 2 வயது அங்கே குழந்தை விளையாடி கொண்டிருந்தார்.

அப்போது அந்த சிறுமியின் தாய் குழந்தை விளையாடி கொண்டு உள்ளது தள்ளி சென்று விளையாடுமாறு கூறியும் அவர்கள் கேட்கவில்லை. அப்போது கௌரவ் கால் தடுமாறி குழந்தை மீது விழுந்துள்ளார்

அதில் சம்பவ இடத்திலேயே குழந்தை மயங்கி விழுந்தார். தொடர்ந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட குழந்தை ஜனவரி நான்காம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவத்திற்கு கௌரவ்வின் கவனக் குறைவே காரணம் என்று காவல்துறையினர் பாரதிய நியாய சன்ஹிதாவின் (பிஎன்எஸ்) 106 (அலட்சியத்தால் உயிரிழப்பை ஏற்படுத்துதல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் அந்த மாணவருக்கு எதிராக மும்பை போலீசார் எஃப்ஐஆர் பதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர். 

Tags: இந்திய செய்திகள்

Give Us Your Feedback